குடியரசு தின விழா அணி வகுப்பு விருதுகளை வழங்கினார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

பாதுகாப்பு அமைச்சகம் குடியரசு தின விழா அணி வகுப்பு விருதுகளை வழங்கினார் மத்திய அமைச்சர்


கிரண் ரிஜிஜூ

தில்லியில் இந்தாண்டு நடைப்பெற்ற குடியரசு தினவிழா அணி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுகளை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இன்று வழங்கினார்.  

தில்லியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், 32 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில் 17 அலங்கார ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. 9 அலங்கார ஊர்திகள் பல துறை அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவை.  5 ஊர்திகள் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவை. இந்த அலங்கார ஊர்திகள், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி, ராணுவத்தின் வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தின. அயோத்தி கலாச்சாரத்தை வெளிப்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது. இரண்டாவது இடத்தை திரிபுரா அலங்கார ஊர்தி பிடித்தது. இது தற்சார்பு இந்தியா இலக்கை அடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மூங்கில் மற்றும் பிரம்பு தயாரிப்பு பொருட்கள் மற்றும் திரிபுரா கலாச்சாரத்தை வெளிப்படுத்தின.

சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கான விருதை தில்லி மவுன்ட் அபு பள்ளி மற்றும் வித்ய பாரதி பள்ளி மாணவர்களுக்கு திரு கிரண் ரிஜிஜூ வழங்கினார்.  இந்த குழந்தைகள், தற்சார்பு இந்தியாவுக்கான தொலைநோக்கை வெளிப்படுத்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்