போலி விலைப்பட்டியலுக்கு எதிரான பிரசாரம்
ஜிஎஸ்டியின் அமலாக்க மற்றும் இணக்க கண்காணிப்பு பிரிவு, சென்னை சிஜிஎஸ்டி ஆணையரகத்தின் மத்திய கலால் வரித்துறை ஆகியவை இதுவரை 252 போலி விலைப் பட்டியல் மோசடிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஜிஎஸ்டி மூலம் ரூ.491 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரியை (Input Tax credit) சட்ட விரோதமாகப் பெறும் நோக்கில் இந்த போலி விலைப் பட்டியல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த போலி விலைப்பட்டியல் மூலம் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து, ஜிஎஸ்டி வரி செலுத்துவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சிஜிஎஸ்டி சேவை மையம் போலி விலைப்பட்டியலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, போலி விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரசுரத்தை ஜிஎஸ்டி மற்றும் சென்னை புறநகர் கலால் வரித்துறை ஆணையர் திரு ஜே.எம். கென்னடி நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி, மற்றும் மத்திய கலால் வரி (Appeals-II) ஆணையர் திரு பி.ஆனந்த் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாநில ஜிஎஸ்டி அமலாக்க அதிகாரியும் பங்கேற்றார்.
இத்தகவல் சென்னை, அண்ணாநகரில் உள்ள சிஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித்துறை, சென்னை புறநகர் சிஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் திருமதி பி ஜெயபாலசுந்தரி வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்