முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவையில் பிரதமர் பல வளர்ச்சித் திட்டங்களைலத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர்


பிரதமர் அலுவலகம் கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார்

துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு இந்தியாவின் உறுதியை சாகர்மாலா திட்டத்தின் மூலம் காண முடியும்: பிரதமர்

இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் கோவை மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர்

நெய்வேலியில்  1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும்  என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.    

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  5 மெகா வாட் திறனில்  மின் தொகுப்பு அமைப்பது மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டத்தை  விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல்  நாட்டினார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும்  பிரதமர் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவை தொழில் மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கான நகரம் என கூறினார்.  இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் கோவை மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பயனளிக்கும் என அவர் கூறினார்.

பவானி சாகர் அணை நவீனமயமாக்கம், 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும் நீர் பாசன வசதி அளிக்கும் என்றும், இத்திட்டம் மூலம் பல மாவட்ட விவசாயிகள் பயனடைவர் என்றும் பிரதமர் கூறினார். 

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு, மிகப் பெரியளவில் பங்களிப்பை அளிப்பதற்காக அவர் தமிழகத்தை பாராட்டினார்.  தொழில் துறை வளர்ச்சிக்கு, தொடர்ச்சியான மின் விநியோகம் அடிப்படை தேவை என்பதால், பல முக்கிய மின் திட்டங்களை தொடங்கி வைப்பதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம், ரூ.3,000 கோடி செலவில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில்  உருவாக்கப்பட்ட திட்டம் என அவர் கூறினார். 

ரூ.7,800 கோடி செலவில் 1000 மெகா வாட் திறனில் கட்டப்பட்ட மற்றொரு அனல் மின் திட்டம், தமிழகத்துக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் மேல் தமிழகத்துக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்பான பல திட்டங்களை பிரமதர் தொடங்கி வைத்தார்.  கடல் வர்த்தகம் மற்றும் துறைமுகம் மூலமான வளர்ச்சியில்  புகழ்பெற்ற வரலாற்றை தமிழகம் கொண்டுள்ளது என அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்தும் மற்றும் பசுமை துறைமுக முயற்சிக்கு உதவும்.

திறமையான துறைமுகங்கள்,  இந்தியா தற்சார்புடையதாக இருக்க உதவும்,  வர்த்தகம் மற்றும் சரக்குகள் கையாள்வதில் உலகளாவிய மையமாக இருக்கும் என்றும்அவர் குறிப்பிட்டார்.

மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி-க்கு  திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.   ‘‘வலுவான இந்திய கப்பல் போக்குவரத்து துறை மற்றும் கடல்சார் வளர்ச்சிக்கு  வ.உ.சி.யின் தொலைநோக்கு நம்மை மிகவும் ஊக்குவிக்கிறது’’  என பிரதமர் கூறினார்.

வ.உ.சி துறைமுகம் 5 மெகா வாட் திறனுடன் கூடிய சூரிய மின்சக்தி நிலையத்தை ரூ.20 கோடி செலவில் அமைத்ததற்கும், 140 கிலோ வாட் திறனுள்ள மேற்கூரை சூரிய மின்சக்தி திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதற்கும் பிரதமர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.  இது தற்சார்பு மின்சக்தி திட்டத்துக்கு சிறந்த உதாரணம் என அவர் கூறினார். 

துறைமுகம் மூலமான வளர்ச்சியில் இந்தியாவின் உறுதியை, சாகர்மாலா திட்டம் மூலம் காண முடியும் என பிரதமர் வலியுறுத்தி கூறினார்.

2015- 2035ம் ஆண்டு காலத்தில் ரூ.6 லட்சம் கோடிக்கு மேலான செலவில், அமல்படுத்த 575 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

துறைமுகம் நவீனமயமாக்கம், புதிய துறைமுகம் உருவாக்கம், துறைமுக இணைப்பு அதிகரிப்பு, துறைமுகம் தொடர்பான தொழில்மயமாக்கம் மற்றும் கடலோர சமூக மேம்பாடு ஆகியவை இந்த பணிகள் என பிரதமர் தெரிவித்தார்.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு பகுதியில்  புதிய பல்நோக்கு சரக்கு பூங்கா விரைவில் தொடங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.  

சாகர்மாலா திட்டத்தின் கீழ், கோரம்பள்ளம் 8-வழி பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இத்திட்டம்  துறைமுகத்துக்கு தடையற்ற போக்குவரத்து வசதியை வழங்கும். இது லாரிகளின் போக்குவரத்து  நேரத்தை மேலும் குறைக்கும் என திரு நரேந்திர மோடி கூறினார்.

தனிநபரின் கவுரவத்தை உறுதி செய்வதுதான் வளர்ச்சியின் முக்கியமான அம்சம் என திரு. நரேந்திர மோடி கூறினார்.  ‘‘கவுரவத்தை உறுதிசெய்யும் அடிப்படையான வழிகளில் ஒன்று, ஒருவருக்கு இருப்பிடத்தை வழங்குதல்.

நமது மக்களின் கனவுகளை நனவாக்க, பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது’’ என அவர் கூறினார்.  பலபகுதிகளில் 4,144 குடியிருப்புகளை தொடங்கி வைத்ததிலும், தமிழகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டியதற்கும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் செலவு ரூ.332 கோடி என்றும், இந்த வீடுகள் 70 ஆண்டு சுதந்திரத்துக்கு பின்பும் வீடு இல்லாதவர்களுக்கு  வழங்கப்படும் என அவர் கூறினார்.  

ஸ்மார்ட் நகரங்களில் பல சேவைகளை நிர்வகிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள்,  புத்திசாலித்தனமான மற்றும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் என்றும் பிரதமர்கூறினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...