சங்கல்ப் - ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவித்து மாவட்ட திறன் குழுக்களை வலுப்படுத்துதல்

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சங்கல்ப் - ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவித்து மாவட்ட திறன் குழுக்களை வலுப்படுத்துதல்


‘சங்கல்ப்பின் கீழ் கூட்டுகளின் மூலம் திறன் வளர்த்தலை மாற்றியமைத்தல்’ என்னும் நிகழ்ச்சிக்கும், மகாத்மா காந்தி தேசிய உதவித்தொகை மற்றும் இதர செயல்பாடுகளின் தொடக்க நிகழ்வுகளுக்கும் மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே தலைமை வகித்தார்.

சங்கல்ப் எனப்படும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவுசார் விழிப்புணர்வு என்னும் உலக வங்கி நிதியுதவி பெற்ற திட்டம், மாவட்ட திறன்வளர்த்தல் நிர்வாகத்தையும், மாவட்ட திறன்வளர்த்தல் குழுக்களையும் வலுப்படுத்துகிறது.

69 மாவட்டங்களில் 69 பேருடன் மகாத்மா காந்தி தேசிய உதவித்தொகை திட்டம் தொடங்கிய நிலையில், நாட்டிலுள்ள இதர மாவட்டங்களுக்கும் அமைச்சகம் இதை விரிவுப்படுத்தியுள்ளது.

மேலும், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள மாவட்ட அலுவலர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சியை அளிப்பதற்காக, கேரள உள்ளாட்சி நிர்வாக நிறுவனத்துடன் அமைச்சகம் கூட்டு சேர்ந்துள்ளது.

சங்கல்ப்பின் கீழ் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படுவது குறித்து பேசிய மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் அமைச்சக செயலாளர் திரு. பிரவீன் குமார், திறன் வளர்த்தல் மற்றும் பயிற்சி அளித்தலில் மாவட்ட திறன் குழுக்களுக்கு கள அளவில் சிறப்பான ஆதரவளிப்பதற்கு இன்று தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் கவனம் செலுத்துகின்றன என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்