சென்னையில் புறநானூற்றில் மேற்கோள் காட்டி பிரதமர் உரை

ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டி நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்துடன் பிரதமர் நரேந்திர மோடி உரை.   

“வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோலுயரும்

கோலுயரக் கோனுயர்வான்" எனும்   புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி

கல்லணை புதுப்பிக்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம். கல்விச்சாலையும் வைப்போம் ,'

எனும் மகாகவி பாரதியாரின் பாடலையும் மேற்கோள் காட்டினார் பிரதமர்  சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பேருந்துகள், நிலையத்தை விட்டுப் பல மணி நேரமாக வெளியே வரவேயில்லை,

கடற்கரை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், எந்த வழியாகப் போனதோ தெரியவில்லை ,

 

கோயம்பேடு மார்க்கமான பேருந்துகள் தான் கோயம்பேட்டிலிருந்து திருவொற்றியூர், திருவொற்றியூரிலிருந்து கோயம்பேடு என்று  வழித்தட சிக்கல் இல்லாமல் இயக்கப் பட்டது .

இன்று நடக்கும்  இளங்கலைத் தேர்வுகள், பல  தேர்வு மையத்தில் நடந்துள்ளது, அதற்கெல்லாம் எப்படிப் போய் மாணவர்கள் தேர்வு எழுதினார்களோ தெரியவில்லை .

தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு இன்னொருநாள் தேர்வு நடத்தப்படுமா என்றும் தெரியவில்லை .

பெட்ரோல் விலை  லிட்டர் தொண்ணூறு ரூபாயைத் தாண்டி விட்டதால், ஆட்டோ டிரைவர்களால் வழக்கம் போல் முப்பது, நாப்பதுக்கும் ’ஷேர்’ செய் ஆட்டோக்கள் மூலம் நேற்று முதலே இயக்க முடியவில்லை; ஆட்டோவை இயக்கினாலும் இன்று சவாரிக்கு ஆட்டோவே சாலையில் இல்லை. என்ற நிலை 

வண்ணாரப்பேட்டையிலிரிந்து திருவொற்றியூர் 

அஜாக்ஸ் வரை இன்று மட்டும்  மெட்ரோவில் இலவசப்பயணம் என்கிறார்கள்,

 ஒருநாள் மட்டுமே. பிரதமர் நரேந்திர மோடி  தமிழகத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 1 விரிவாக்கம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸிற்கான டிஸ்கவரி வளாகம் உள்ளிட்ட பல திட்டங்களைத் திறந்து வைத்தார். மாலை 3.30 மணியளவில் அவர் கேரளாவிலுள்ள கொச்சியைப் பார்வையிட உள்ளார். வாக்கெடுப்புக்குட்பட்ட மாநிலத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்க.

"நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி  சென்னை (தமிழ்நாடு) மற்றும் கொச்சி (கேரளா) ஆகிய இடங்களில் இருக்கும். ஆத்மனிர்பர் பாரத்தின் பார்வையை நிறைவேற்றுவதற்கான வேகத்தை அதிகரிக்கும் வகையில் பல மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டங்கள் நமது குடிமக்களுக்கு 'எளிதான வாழ்க்கை' அதிகரிக்கும் , "திரு. மோடி தனது அதிகாரப்பூர்வ கைப்பிடியிலிருந்து ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். இந்தப் பயணம் மூலம் தமிழக முதல்வர் அறிவித்த ஏழு உட்பிரிவில் உள்ள மக்கள் ஒரேபெயரில் அழைக்கும் பெயர் மசோதாவாக தாக்கலாகும் செய்தியை வெளியிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்