எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படை அயராது முயற்சிபாதுகாப்பு அமைச்சகம் எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படை அயராது முயற்சி

இலங்கை அருகே எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் அயராது பணியாற்றுகின்றன.

இலங்கையின் கொழும்பு அருகே எம்.வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில், இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை கடந்த 25ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு ‘ஆபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2’ என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல்சார் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

தற்போது இந்திய கடலோர காவல் படையின் 3 கப்பல்கள், கடல் தண்ணீர் மற்றும் ஏஎப்எப்எப் ரசாயணத்தை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஓயாத தீயணைப்பு முயற்சிகள் மூலம் கப்பலில் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புகையும் குறைந்துள்ளது. தற்போது கப்பலின்  சிறு பகுதியில்  மட்டும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த கடலோர காவல் படையின் வைபவ் மற்றும் வஜ்ரா கப்பல்களுடன் இணைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதை அகற்ற சமுத்ர பிரகாரி கப்பலும் தயார் நிலையில் உள்ளது.  கூடுதலாக இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் ரக விமானம், மதுரையில் இருந்து தினமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

தற்போது வரை எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா