தோழர் மைதிலி சிவராமன் மறைவு தமிழ் சமூகத்திற்கு இழப்பு

தோழர் மைதிலி சிவராமன் மறைவு தமிழ் சமூகத்திற்கு  இழப்பு
. தீவிரமான மார்க்சியவாதி, பெண்ணுரிமைப் போராளி.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் பெண்கள் புரட்சிக்கு வித்திட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவருமானவர் மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மைதிலி சிவராமனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்றவர்,  பலனிற்றி இன்று உயிரிழந்தார்.

மைதிலி சிவராமன் 1939 ஆம் ஆண்டில் பிறந்தவர்,டெல்லி இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் கல்வி நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்ததுள்ளார். பின் அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஐநாவில் மூன்றாம் உலக நாடுகள் குறித்து இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சிறிது காலமிருந்தவர். 1968 ஆம் ஆண்டு, ஐநா சபையில் தனது வேலையைத் துறந்தவர், தமிழகம் திரும்பிய பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு  குரல் கொடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ் மாநிலக் குழு உறுப்பினராகவும்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 1973 ஆம் ஆண்டு உருவான போது அமைப்பின் தலைவராக கே.பி.ஜானகியம்மாளும் துணைத் தலைவராக மைதிலி சிவராமனும் செயல்பட்டனர்.1968ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 41 விவசாயக் கூலித்தொழிலாளர் படுகொலை செய்யப்பட்ட போது நேரடியாகக் களத்திற்குச் சென்று,  படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி, புத்தகம் வெளியிட்டார். அதன் பின்னரே கீழவெண்மணியில் நடந்த சாதியப் படுகொலை பற்றி உலகுக்குத் தெரிந்தது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற வாச்சாத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கிலும் நீதி கிடைக்க மைதிலி சிவராமனின் பங்கு முக்கியமானது.

மைதிலி சிவராமனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக,கேரள முதல்வர்கள்,  சமூகச் செயற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ஒரு சமூக நீதி போராளிக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இதய அஞ்சலி .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா