மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப்பொருட்கள்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப்பொருட்கள்

சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் நன்கொடையாக அளிக்கும் கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. இவைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வரை, மொத்தம்  18,265 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்,  19,085 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்,  15,256 வென்டிலேட்டர்கள், 7.7  லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபவிபிராவிர் மாத்திரைகள் பல மாநிலங்களுக்கு சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும் அனுப்பப்பட்டுள்ளன. 

கடந்த 27/ 29ம் தேதிகளில் தென்கொரியா, இந்தியா-பஹ்ரைன் அமைப்புகள், ஷாங்காயில் உள்ள இந்தியர்கள், ஐக்கிய அரசு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் குழு, சி ட்ரிப் மற்றும் எலி லிலி ஆகிய அமைப்புகள் அனுப்பிய முக்கியப் பொருட்கள்:

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 225.

பாரிசிடினிப் : 5.6 லட்சம் மாத்திரைகள்.

மற்றும் கொவிட்  துரித பரிசோதனை கருவிகள்.

இவற்றை மாநிலங்களுக்கு உடனடியாக விநியோகிக்கும் பணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா