பிரதமர்.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு பாஜக அமைச்சர்கள் வாழ்த்துக்களும் காங்கிரஸ் விமர்சனமும்பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு: ஜம்முவில் 7 பஞ்சாயத்துகளில் கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 7 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் 7 பஞ்சாயத்துகளில் நடந்த கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்கள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘‘அந்தியோதயா என்ற உண்மையான உணர்வுடன், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதருக்கும் பலன் கிடைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளில், மக்களுக்கு ஆதரவான பல வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்தார்’’  என கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற போது, அது அவநம்பிக்கையிலிருந்து, நம்பிக்கை நோக்கிய புதிய பயணத்தின் ஆரம்பமாக இருந்தது என்றும், அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதல் முன்னேற்றமான வளர்ச்சிக்கு வழிகாட்டியதாகவும் அவர் கூறினார்.

135 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் கொவிட்-19 போராட்டத்துக்கு குறுகிய நோக்கங்களை கடந்து, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் நெருக்கடியை நாம் சந்திப்பதால், இது விமர்சனத்தில் ஈடுபடுவதற்கான தருணம் இல்லை என்றும், ஒருங்கிணைந்த தீர்மானத்துடன்  செயல்பட்டால்தான், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  

ஜம்முவில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது,  தனது தொகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் கொவிட் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இங்கு ஆக்ஸிஜன் ஆலைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்கின்றன எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். 

உள்துறை அமைச்சகம்

மத்திய அரசின் 7 வது சாதனை ஆண்டுகள் நிறைவு: பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வெளியிட்ட  சுட்டுரைகளில் திரு அமித்ஷா கூறுகையில், ‘‘ வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசு அளித்துள்ளது.’’ என கூறியுள்ளார்.

‘‘ இந்த 7 ஆண்டுகளில், திரு நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.’’ என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  

‘ கடந்த 7 ஆண்டுகளாக,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து  வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என திரு அமித்ஷா கூறியுள்ளார்.                          இந்த நிலையில் பிரதமர்  நரேந்திர மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ். அறிக்கை வெளியிட்டது

7 குற்றச்சாட்டுகள் அடங்கிய சார்ஜ் சீட்.

1. மத்தியில் 2014ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜிடிபி 8.1% ஆக இருந்தது. ஆனால் கொரோனாவிற்கு முன்பே ஜிடிபியை பாஜக அரசு 4.2% ஆக சரித்துவிட்டது. அதன்பன் 2020-2021 முதல் காலாண்டில் ஜிடிபி - 24.1% ஆனது. இரண்டாம் காலாண்டிடில் இது -7.5% ஆனது. 2020-2021ல் இது முழுமையாக -8 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்தியாவில் வேலைவாய்ப்புயின்மை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. 45 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவை இந்தியா வேலைவாய்ப்பு துறையில் சந்தித்துள்ளது.

3. பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது, கடுகு எண்ணெய் 200 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது. எல்பிஜி சிலிண்டர் விலை 809 ரூபாய்க்கு விர்ப்பிக்கிறது. விலைவாசி கடும் உயர்வை சந்தித்துள்ளது.

4. விவசாயிகளை பாஜக அரசு மசமாக் நடடத்துகிறது. தவறான சட்டங்கள் மூலம் அவர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு வேளாண் சட்டங்களை பாஜக திரும்ப பெற வேண்டும்.

5. ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசு இது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 27 கோடி மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டை தாண்டியதாக உலக வங்கி தெரிவித்தது. ஆனால் PEW Research Centre அறிக்கையின்படி இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் 3.20 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

6. இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா மரணங்களை மத்திய அரசு மறைகிறது. வேக்சின் கொடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்தியாவிலேயே வேக்சின் இல்லாத போது 6.63 கோடி வேக்சின்களை மத்திய அரசு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது ஏன்?

7. மோடி அரசு தன்னை வலிமையான அரசு என்று காட்டிக்கொள்கிறது. ஆனால் சீனாவை அவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை. லடாக்கில், அருணாசலப்பிரதேசத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்பை பாஜக அரசால் தட்டிக்கேட்க முடியவில்லை என்று காங்கிரஸ் சார்பாக உருவாக்கப்பட்ட சார்ஜ் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா