ஊரடங்கில் அதிகம் பாதிப்புகள் அடித்தட்டுத் தினக்கூலிகளுக்கே பட்டினி ச் சாவுகள் வராமல் தடுக்க தலைவர்கள் கோரிக்கை
வாழும் மக்களில் மூன்று வகை அதில் தற்போது அதிகம் பாதிப்புகள் அடித்தட்டு தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று மாலை வந்த பிறகு உணவு சமைத்து உண்ணும் அடித்தள மக்களின் நிலை தான் தற்போது மிகவும் பாதிப்பு . உழைக்கும் வர்க்கம் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்து சனிக்கிழமை ஊதியம் வாங்கி சனியோ, ஞாயிறன்று தான் அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்க இயலும்.
சரி, மற்ற அடுத்த வர்க்கமும் சற்று இரண்டு வாரமோ, தேவைக்கு நித்தமும் வாங்கும். அரிசி , பருப்பு ஒரு மாதம் வாங்கும் குடும்பம் மாத ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் வாங்கிய மளிகை அப்போது இந்த முழு ஊரடங்கை எதிர் நோக்கி முன் தீர்மானிக்கும் சக்தியும் இல்ல்லாமல் இருக்கிறதை வைத்து வாங்கி இருப்பார்கள்.
இப்போது தொடர்ந்து இழுத்து மூடி வைத்தால் எப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டிய உணவுப் பொருள்களை வாங்குவது?
அரசு உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் போன்று எங்கிருந்தோ வரும்.
பொது மக்கள் எங்கு போவார்கள்? இது ஒரு நாடோடி பழைய இரும்பு குப்பை நெகிழி (பிளாஸ்டிக்) சேகரிப்பு நபர்கள் கயலான் கடை அருகில் பேசிய வார்த்தைகள் இவை மனதை உருக்கும் சீக்கிரம் மூடிவிட்டார்கள். தள்ளுவண்டியில் பிளாஸ்டிக், இரும்பு பொருளுடன் ஒருவரும், பெரிய கோணிபை நிறைய பாட்டில்களுடன் ஒருவரும் அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறார்கள். ஓனர் வருவதாக சொல்லியிருப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தில் ஏதாவது வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர். அப்படித் தாமதமாகும் பட்சத்தில் அருகிலிருக்கும் மளிகை கடைக்காரர் குறிப்பிட்ட தொகைக்கு பொருள் வாங்கி செல்லுமாறும் பின்பு பணம் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
எனினும் சிறிது நேரம் காத்திருக்கலாம் என காத்திருக்கின்றனர். இவர்களுக்காகவே கடையை மீண்டும் திறக்க வரும் ஓனர், கடைக்காரர்கள் என இவர்கள் இக்கொடுங்காலத்தில் உதவிக் கொள்வதில் அன்பு தளைக்கிறது.
இவர்களை போல எத்தனை பேர் வாடுகிறார்களோ தெரியவில்லை. ஒரு யோசனையாக அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களை அவர்களுக்காக திறக்கலாம். அரசு பள்ளி அவர்கள் அனைவருக்கும் அணுக எளிதாக இருக்கும். நோய்த் தொற்றைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எளியவர்களின் பசியாற்றுவதும்.முக்கியம் தானே இந்தச் சூழ்நிலையில் மத்திய
நிதி அமைச்சருக்கு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்றவர்கள் கோரிக்கைக் கடிதம்
அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புகள் - தண்டத் தொகை இரத்து - காலக் தவணை கெடு நீட்டிப்புக் கோரி
நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் இது.
அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை.
இந்த அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புகள் - Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA) - தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகையுண்டு. காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது.
கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்புத் தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது. புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020- இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அஞ்சல் துறை).
இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தேசத்தின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கில் உள்ளன. ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடன் அறிவிக்குமாறு அக் கடிதத்தில் கோரி உள்ளனர்..
ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உண்டு. வண்டியில் காய்கறி மளிகை. வாங்கக் காசு இல்லை. பட்டினியில் லட்சக் கணக்கான ஏழை மக்கள்..யார் இதை கேட்பது?. சிலருக்கு போன ஆட்சியின் பாசம், பலருக்கு இந்த ஆட்சி மேல் காதல் எங்களிடம் ரேஷன் கார்டு கூட இல்லை
கேட்கவே யாருமில்லை..அம்பலமேறாத ஏழை சொல்! இனி பட்டினிச் சாவு தற்கொலைகள் தவிர்க்க முடியாத்தாகி விடும்.கொரோனாவுக்கு மூன்று அலை இருக்கலாம். ஏழைகளுக்கு இரண்டாவது பட்டினி மூன்றாவது பட்டினி என சோகத்தைத் தாங்க முடியாது. அரசு கருனை காட்டினால் தான் இவர்கள் வாழ்வு விடியும். செய்வார்களா?
.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாதத் தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது குறித்து பல தலைப்புகளின் கண்டனத்திற்கு இது வரை தகுந்த பதிலில்லாத நிலை.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் காலம் தாழ்த்தி பார்ப்பது நியாயமா என்று வினா வருகிறது. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெறும் நிலை.
தமிழக முதலமைசரும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து மக்கள் விலக்குப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் விரும்பும் நடவடிக்கையாகும்
கருத்துகள்