அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனின் தாயார் காலமானார் அமைச்சர்கள் அஞ்சலி

சிவகங்கை மாவட்டத் திமுக செயளாலரும் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான கே.ஆர். பெரிய கருப்பனின் தாயார்

கரு. கருப்பாயி அம்மாள் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். எம்.எல். ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.கேஆர்.பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள் (வயது87) திருப்பத்தூரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக  காலை 6 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். அவரது தந்தை முதலில் அவர் தேர்தலில் போட்டியிட்ட போது காலமானார் தற்போது அவரது தாயார் காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான அரளிக்கோட்டை கிராமத்திற்கு உடல் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கார்த்திசிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, எம்எல்ஏ தமிழரசி, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  மாலை இறுதி சடங்கிற்கு பிறகு கருப்பாயி அம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமைச்சர் பெரிய கருப்பனை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா