உலகத்தில் வாழும் பௌத்தர்கள் கொண்டாடும் புத்த பௌர்ணமி விழா குடியரசு தலைவர் பிரதமர் வாழ்த்து

புத்த பூர்ணிமா அல்லது வைசாகம் அல்லது விசாகம் தமிழகத்தின் வைகாசி விசாகம் இலங்கையில் Wesak மே மாத பௌர்ணமி (முழு நிலா நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை . பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

பௌத்த பிக்குகள் இந்தியாவில் உள்ள சிராவஸ்தி அருகே உள்ள ஜேடவனத் தோட்டத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடுதல் இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.  சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்து. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள். புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள். தற்போது இடம்:குசிநகர் இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பௌர்ணமி நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கிடையே சில வேறுபாடுகள் இருக்கின்றது. இன்று புத்த பூர்ணிமா வைகாசி அனுஷம் 

அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆன்றோர்கள் பலரால் திருவள்ளுவர் பிறந்த தினமாக முன்பு கொண்டாடப்பட்டது.அது பின் காலத்தில் மாற்றப்பட்டது. இந்தியாவில் தோன்றிய புத்தம் மௌரிய மற்றும் குப்த அரசுகள் மூலம் சென்று பரவல் காரணமாக சீனா, ஜப்பான், இலங்கை, தாயாலாந்து, மலேஷியா, மியன்மார் உள்ளிட்ட ஆறு ஏழாம் நூற்றாண்டில் அயல் நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்றனர். குடியரசுத் தலைவர் செயலகம்  புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவரின் வாழ்த்து செய்தி

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

“புத்த பூர்ணிமா புனித நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பகவான் புத்தரின் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துன்பத்தில் இருந்து சுதந்திரத்தை நோக்கி புத்தரின் போதனைகள் நம்மை அழைத்து செல்கின்றன. வன்முறை மற்றும் அதர்மத்தில் இருந்து விலகி நிற்குமாறு புத்தர் செய்த போதனை, நல்ல மனிதர்களாக விளங்க நமக்கு நூற்றாண்டுகளாக ஊக்கமளித்து வருகிறது.

புத்தரின் வாழ்க்கையில் இரண்டற கலந்துள்ள அகிம்சை, அமைதி, கருணை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை, மற்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரது போதனைகள் உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான ஊக்கமளித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று எனும் இதுவரை கண்டிறாத நெருக்கடியை நாம் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். இந்த புத்த பூர்ணிமா நன்னாளில், நமது உறுதி மற்றும் ஒற்றுமையின் மூலம், பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக நாம் மீண்டு வந்து, மக்களின் நன்மையை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.”

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்.

புத்த பூர்ணிமா நாளில் காணொலி காட்சி மூலம் நடைபெரும் உலகளாவிய பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துகிறார்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு 2021 மே 26ம் தேதி காலை 9.45 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் உலகளாவிய பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்ச்சியை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்புடன்(ஐபிசி) இணைந்து நடத்துகிறது. இதில் உலகில் உள்ள அனைத்து புத்த மடாலயங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.  உலகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட புத்த மத தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா