தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வரத் துவங்கியுள்ளது
கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே கிராமப்புறங்களில் பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் துயரமும் நடக்கிறது. கிராமங்களில் கொரோனா சிகிச்சை குறித்த விழிப்புணர்வும், அதற்கான வசதிகளும் இல்லாததே காரணம்.
தமிழ்நாட்டில் நேற்று தொற்றுகளின் எண்ணிக்கை 35,873 ஆகும். இது அதற்கு முந்தைய நாள் எண்ணிக்கையை விட 311 குறைவு ,சென்னையில் கொரோனா தொற்று 454 குறைந்து 5,559 ஆனது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் பரவல் குறைந்த நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பெரும்பான்மையினருக்கு கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஒருவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பாட்டாலும் கூட அவர்களுக்கு உள்ளூரில் மருத்துவ வசதிகள் கிடைக்காததும், வெளியூர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு, வசதிகளும் இல்லாததும் தான் இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் . மற்றொருபுறம், ஒரு கட்டத்தில் நகரப்புறங்களில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பரவத் தொடங்கியுள்ளது.
கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களைக் காப்பாற்ற ஒரே வழி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவது தான். தமிழ்நாட்டில் 1806 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தவிர 422 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 20 படுக்கைகளும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 50 படுக்கைகளும் கொண்ட முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்குவதன் மூலம் 57,120 படுக்கைகளை ஏற்படுத்தி மருத்துவம் வழங்க முடியும்.
தேவைப்பட்டால் கிராமப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றி மருத்துவச் சிகிச்சையளிக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் கொரோனா பாதிப்புகள் குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அறிக்கை பெற்று அதனடிப்படையில் அங்கு சோதனையும் சிகிச்சையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா பரவல் இன்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2 லட்சத்து 84,278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப் பேருக்கு கூட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் அளிக்க வாய்ப்புகள் குறைவு.பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமையில் தான் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆரோக்கியமாக உள்ள பலர் வீடுகளில் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றிக் கொண்டு நோய் பரப்பி வருகின்றனர். போதிய உடல் வலிமையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கு வழியில்லாதவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
இவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் தேவையின்றி வெளியில் சுற்றி நோயைப் பரப்புவதையும், மருத்துவக் கண்காணிப்பும், சத்தான உணவும் கிடைக்காமல் உயிரிழப்பதையும் தடுக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்படும் முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களில் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் மருத்துவம் வழங்கலாம். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அடுத்தநிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது ஆகியவற்றை மட்டும் செய்யலாம். இதற்கு ஏற்கனவே அங்கு இருக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கூடுதலாக சிலரை மட்டும் நியமித்தால் போதுமானது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை அளிப்பதன் மூலம் வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் படையெடுத்து அங்குள்ளவர்களுக்கு தேவையற்ற அழுத்தம் தருவதை தவிர்க்க முடியும்.
எனவே, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல் நிலை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் கிராமப்புறங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை வலுப்பெறும் சூழ்நிலையில் . தற்போது அரசும் பல நல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா தொற்றுக்கான ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. ஊரடங்கை காரணம் காட்டி தடுப்பூசி செலுத்துவதை தள்ளி போடுவது கூடாது என்பதும் தடுப்பூசி செலுத்த ஊரடங்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது. ஊரடங்கில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் செய்வதில் மனச்சாட்சி இல்லாத எல்லா கடையிலும் மக்கள் கூட்டம் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை சேய்து முடித்து விட்டாங்க. பல அடித்தட்டு ஊழல் அலுவலர்கள் அதைத் தடுக்கவில்லை இந்த பாதிப்பு அரசு அதிகாரிகள் தடுத்திட முடியும் ஆனால் தடுக்கவில்லை இலஞ்சத்தில் மிதக்கும் திருந்தாத அரசு அலுவலர் தான் காரணம் வழக்கமாக வாரத்திற்கு ரூ.350-400 ரூபாய்க்கு காய்கறி வாங்கும் ஒரு சிறிய குடும்பம்.இன்றைக்கு ரூ.700-க்கு மேல ஆனது அதை தவிர்க்க முன்னால் பிரதமர் மொரார்ஜி தேசாய் நடத்திய நிர்வாகம் தேவை மேலும் விலை பட்டியல் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக கடைகள் பெருகியதும்.அதை முறைப்படி நடத்த அனுமதிக்காத சில வட்டார நிர்வாகம் தான் காரணம். குறிப்பாக இன்று காய்கனிகள் விற்பனை
பீன்ஸ் 1 கிலோ - 290 ரூபாய்
கேரட் 1 கிலோ- 190 ரூபாய்
கத்தரிக்காய் 1 கிலோ - 100 ரூபாய்
கொரோனா தான் உச்சமடைகிறதென்றால், ஒன்றரை நாள் தளர்வில் விலைவாசியும் உச்சியில் இருப்பதை நாம் மட்டுமல்ல தனியார் தொலைக்காட்சியும் சொல்கிறது.
உச்சத்தில் காய்கறி விலை. அதற்கு விரைவில் முடிவு வரலாம். அரசின் சார்பில் சில அமைச்சர்கள் பம்பரமாகச் சுற்றி பணியாற்றினாலும், பரவல் நிலைமைகள். காரணமாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதல்வர்.
நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறதாகத் தெரிவித்துள்ளார் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து முதல்வர் ஆய்வு செய்தார்.
தமிழக அரசு கோவிட்-19 சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது.
விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா பரவாமல் தடுப்போம் என முதல்வர் தெரிவித்தார். மதுரையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என களத்தில் உதவும் நிலை நிதியமைச்சர் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு கடந்த அரசு பல மாதங்களாக சம்பளம் வழங்காததை அறிந்து. செவிலியர்கள் சிலர் அவரிடம் வைத்த கோரிக்கைக்கு பின் நிறுத்தப்பட்ட சம்பளம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் மற்ற கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர்.
தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாநிலத்தில் மருத்துவத்துறை தகவல் .தமிழத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையில் 91 மருத்துவர்களும், 2 வது அலையில் 14 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளதாக ஐஎம்ஏ தகவல் திருச்சியில் கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். எனவும் ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கோவிட்-19 இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் எனவும் முதல்வர் தகவல் கோவை கொடிசியா வளாகத்தில் கோவில்-19 சிறப்புச் சிகிச்சை மையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 820 படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 360 படுக்கை வசதிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
பெருந்தொற்றை முறியடிக்க போர்க்கால நடவடிக்கை தொடர்கிறது எனத் தகவல். மதுரை தோப்பூரில் சிறப்பு வசதிகளுடன் 200 ஆக்ஸிஜன் படுக்கைகளோடு அமைக்கப்பட்டுள்ள கொரொனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். கூடுதலாக 300 படுக்கைகள் அமையவுள்ள இம்மையம் ஆக்சிஜன் படுக்கை தேவையை ஓரளவு நிறைவு செய்யும் என நம்புகிறேன் எனத் தகவல். தோப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை தமிழக முதல்வர் திறந்துவைத்ததைத் தொடர்ந்து பதிமூன்றாவது முறையாக ரூர்கேலாவில் இருந்து வரும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி இருவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் எதிர் வரும் நாட்களில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்ததுடன் குறிப்பாக ஊராட்சிகள் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைப்பது பற்றி ஆலோசித்ததாகத் தகவல்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், டி.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மருத்துவமனை முதல்வர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இச் சூழ்நிலையில் பிரபலமான தனியார் ஆய்வகமான மெட் ஆல் -கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்து
தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக பொய்யான தகவல்களைக் கூறியதாக புகார்
மே மாதம் 19, மற்றும் மே மாதம் 20 ஆம் தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக தகவல் இந்தக் கொடியவர்கள் மீது ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் தேவை என்பதே அணைவரின் விருப்பமாகும்.
கருத்துகள்