இந்திய யூனியன் பிரதேச இலட்சத் தீவுகளில் என்ன பிரச்சனை.?

இந்திய யூனியன் பிரதேச இலட்சத் தீவுகளில் என்ன பிரச்சனை.?


இலட்சத் தீவின் நிர்வாக அதிகாரியாக குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோதா படேல் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கபட்டார். இவர் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர்.

மே மாதம் 21 ஆம் தேதியன்று இலட்ச தீவிலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்ற 15 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்களுக்கு உள்ளூர் ஆட்கள் உதவி செய்ததாகத் தகவல். 

இப்போது குண்டர் சட்டத்தை அங்கு ஏன் அமல்படுத்தியிருக்கிறார்கள் என்றால் தீவிரவாதிகளுக்கு உதவும் நபர்களைப் பதம் பார்க்கவே

இந்தச் சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கத் துவங்கிய நிலையில் நவம்பர் மாதத்தில் மூவாயிரம் கோடி மதிப்பிலான மயக்க மருந்து மற்றும் அபின் கடத்தல் படகும் இங்கு பிடிபட்டது. 

இதன் பிறகு தான் பிரபுல் கோதா படேல் கடந்த டிசம்பர் மாதத்தில் நியமிக்கபட்டிருக்கார்.

99 சதவீதம் தனியார்கள் வாழும் யூனியன் பிரதேசமான இங்கு மதகோர்ட் தானாம் இவ்வளவு காலமும்.  

எங்கள் மதம் விலக்கிய மதுவைக் கொண்டு வந்து எங்களை, எங்கள் மதத்தை அவமானப்படுத்துகிறார்னு இப்போது பேசுகிறார்கள்.

அங்கே மது விற்பனை கள்ளச் சந்தையில் தாறுமாறாக விற்பனை செய்யபட்டு வருகிறது

நாட்டில்  கள்ளச் கடத்தல், ஆயுதக் கடத்தல், மயக்க மருந்து அபின் என்று வியாபாரத்திலிருந்த தீவு இப்போது மெல்ல மெல்ல இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. 

அது பொறுக்கமாட்டாமல்  தொழில் செய்து வந்த தனியார்களும் கமிஷன் பெறும் கேரளவினரும் இப்போது கதற ஆரம்பிக்கிறார்கள்.

இதுவரை அவர்கள் செய்த அலப்பரைகக்கு ஆப்பு வைத்த அடித்தளம் அமைக்கப்பட்ட உடன் தான், இத்தனை எதிர்ப்புகள். 

இதை எல்லாம் உணர்ந்து தான் மத்திய அரசு இப்போதே நடவடிக்கை எடுக்கிறது.                              இலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசமாகும். தலைநகரம் கவரத்தி மொத்தம் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட 36 தீவுகளின் கூட்டமாக அமைந்துள்ளது. கேரள மாநிலக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரத்தில், அரபிக் கடலில் உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.   இத்தீவு குறித்து ஒரு வரலாற்றுப் பார்வை    புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்தத் தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக் கதைகளும் தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி ஆகும். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம்  நிலவியதாகத் தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாகவும் உள்ள நம்பிக்கையின் படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவிலுள்ளது. 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.

1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன.   பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

1956 நவம்பர் 1 ஆம் தேதியன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 ஆம் தேதியன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.

மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா