யூடியூப் சேனல் இணையவழி விளையாட்டில் பணம் குவித்த பப்ஜி மதன் மீது 159 புகார்கள்

யூடியூப் சேனல்  இணையவழி


விளையாட்டில்ஆபாசமாகப் பேசிய விவகார அட்மின் (நிர்வாகி) மதனின் மனைவி கிருத்திகாவை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் 12 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்தனர். தலைமறைவான 'பப்ஜி’ மதனைப் பிடிக்க தனிப்படை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான ‘பப்ஜி’யை, சேலத்தை சேர்ந்த மதன்(எ) பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் மூலம் 8 லட்சம் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அவருடன் ஆன்லைனில் விளையாடும் போது சிறுவர்கள் மற்றும் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி தனது யூடியூப் சேனலில் பதிவு செய்ததனால் அதிர்ச்சியடைந்த  சிறுவர்கள் மற்றும் பெண்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, சென்னையென தமிழகம் முழுவதும் மதன் மீது புகார் அளிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களைத் தொடர்ந்து காவல்துறையினர் மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதற்கிடையே சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மைக்கேல்  அளித்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சென்னை புளியாந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில்  அளிக்கப்பட்ட புகார்களும் காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவால் உத்தரவுப்படி மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  விசாரணையைத் தொடங்கிய போது, மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் படி அந்தந்த மாவட்டக் காவல்துறையினர் மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர் கைதிலிருந்து தப்பிக்க மதன் தலைமறைவாகிவிட, காவல்துறைக்கு சவால் விடும் மதனின் ஆடியோ ஒன்றும் வலைத்தளங்களில்வெளியானதைத்தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பல முயற்சிகள் செய்தும். அவனைக் கைது செய்ய முடியவில்லை.

தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் தனிப்படை சேலம் சென்று மதன் நடத்திய யூடியூப் சேனலின் அட்மினாக (நிர்வாகி) உள்ள அவரது மனைவி கிருத்திகாவை அவரது 8 மாத குழந்தையுடன் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். பின் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா மற்றும் சென்னை பெருங்களத்தூரில் வசிக்கும் அவரது தந்தை மாணிக்கத்தையும் அழைத்து விசாரணை நடத்தினர். 12 மணி நேரம் நடத்திய விசாரணையில், மதனின் மனைவி கிருத்திகாவுக்கு அவரது கணவரின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்துள்ளது. ஆனால் அதை அவர் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், மதன் நடத்தி வரும் யூடியூப் சேனலின் அட்மின் என்பதாலும், மதனின் குற்றத்துக்கு துணை நின்றதாலும் கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு கைது செய்தனர். அவரது தந்தை மாணிக்கத்திடம்  விசாரணை நடந்து வருகிறது. கிருத்திகா மற்றும் அவரது தந்தை அளித்த தகவலின் படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மதனைப் பிடிக்க பெங்களூரு விரைந்து அங்கு முகாமிட்டுள்ள மதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று வரை மதன் மீது தமிழகம் முழுவதும் வந்த 159  புகார்களின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி பப்ஜி மதன் மாதம் ரூபாய்.7 லட்சம் சம்பாதித்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பிப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் நிதி நிறுவனக் குடும்பத்தில் உள்ள சிறுவன் தரக்குறைவான கெட்ட சொற்களால் குறிப்பிடப்பட்ட பின்னர் தான் இப்படி ஒரு பப்சி் மதன் இருக்கிறார் அவருக்கு சென்னையில் 2 வீடு, 2 பிஎம்டபிள்யூ கார்கள் இருப்பது தெரிகிறது என்றால் இணையக் குற்றவியல் காவலர்கள் அவர்களது உயரதிகாரிகளின் கவனத்திற்கு இப்போது தான் வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்