தமிழ்நாடு அரசுக்காக உயிர்காக்கும் பிராணவாய்வு பேருருளை பெட்டகங்கள் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்டது


தமிழ்நாடு அரசுக்காக உயிர்காக்கும் பிராணவாய்வு பேருருளை பெட்டகங்கள் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்டது

சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் இன்று (31.5.2021) தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்படும் உயிர்காக்கும் பிராணவாய்வு பேருருளைப் பெட்டகங்களை சென்னை துறைமுக ரயில்வே பகுதியில் முறையாகவும், துரிதமாகவும், கையாண்டு சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கப்பல், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி துறைமுகத்தில் கையாளப்படும் இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது, அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது

இந்த உயிர்காக்கும் பிராணவாயு பேருருளைப் பெட்டகங்கள் மகாராஷ்டிரா மாநிலம் டால்விநகரில் உள்ள ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ் நிறுவனத்திலிருந்து சரக்கு பெட்டக ரயில்கள் வாயிலாக சென்னை துறைமுகம் வந்தடைந்தது. சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட இப்பணியினை சென்னை துறைமுகத்தலைவர் திரு. சுனில்பாலீவால் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சென்னை துறைமுக துணைத்தலைவர் திருஎஸ். பாலாஜி அருண்குமார்,   டிட்கோ நிறுவன பொதுமேலாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சென்னைத் துறைமுகத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா