புதிய மருந்தை உருவாக்குவதற்காக உத்தரப் பிரதேச நிறுவனத்துடன் சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ கைக்கோர்த்துள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய மருந்தை உருவாக்குவதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்துடன் சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ கைக்கோர்த்துள்ளதுஉத்தரப் பிரதேசத்தில் மருந்து குழுமத்தை ஆதரிக்க உறுதி பூண்டுள்ள சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ, புதிய மருந்தை உருவாக்குவதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மார்க் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட்டுடன்  கைக்கோர்த்துள்ளது.

இரத்த குழாய் சார்ந்த மற்றும் பெருமூளை தமனி சார்ந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க எஸ்-007-867 எனும் இந்த மருந்து உதவும். இதற்கான முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சமீபத்தில் இந்நிறுவனம் பெற்றது.

இரத்த குழாய் சார்ந்த மற்றும் பெருமூளை தமனி சார்ந்த நோய்களுக்கான தற்போதைய மருந்துகளை ஒப்பிடும் போது, இரத்தப் போக்கிற்கான வாய்ப்புகள் புதிய மருந்தில் குறைவாகும். விலங்குகள் மீது பரிசோதனை செய்து பார்த்த போது நல்ல விளைவுகளை இம்மருந்து காட்டியது. கொவிட்-19 தொடர்பான சிக்கல்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

“சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ-க்கு இது மிகவும் சிறந்த தருணமாகும். இந்த மருந்து விரைவில் சந்தைகளை அடைந்து மனித குலத்துக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்,” என்று சிடிஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் தபஸ் கே குன்டு கூறினார்.

நிறுவனங்கள்-தொழில் துறைக்கு இடையேயான கூட்டு உத்தரப் பிரதேசத்தில் மருந்து குழுமத்திற்கு பயனளிக்கும் என்றும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் சி மண்டே மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோரின் முயற்சிகளுக்கு இணங்க புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்