போக்குவரத்துத் துறையில்10 ஆயிரம் புதிய பணியாளர்கள் நிரப்பப்பட வேண்டிய சூழல் உள்ளது அமைச்சர் தகவல்

தமிழ் நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்   தற்போது நிலையில் 19,200 பேருந்துகளில் 14215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


ஏசி பேருந்துகள் 710, வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1400 பேருந்துகள் தவிர்த்து

2100 பேருந்துகள் தவிர்த்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை உள்ளது.


10 ஆயிரம் புதிய பணியாளர்கள் நிரப்பப்பட வேண்டிய சூழல் உள்ளது. தமிழ்நாடு முதல்வரிடம் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் விரைவில் மின்சார பேருந்துகளுக்கு மாற்றம்.

8 போடாமல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் மத்திய அரசின் உத்தரவு குறித்து ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

இன்னும் 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.ஓட்டுநர் நடத்துனர் பணியிடம் நிரப்பப்படும்

போக்குவரத்து துறை அமைச்சர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் அளித்த தகவலின் படி

கடந்த கால ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவர் படம் மற்றும் திருக்குறள் அகற்றப்பட்டதை மீண்டும் புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 19,200 பேருந்துகளில் இன்றைய தினம் 14,215 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்துக ளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

நிதிநிலை அறிக்கை க்குப் பிறகு முதல்வரை கலந்தாலோசித்து காலியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு செய்யப்ப டும்.

கடந்த அதிமுக ஆட்சி யில் போதிய பராமரிப்பு இல்லாததால் பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்தப் பேருந்துக ளையும் போக்குவரத்துறையும் சீரமைக்க வேண் டிய நிலைமை உள்ளது. தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளும், புகார்களையும் முன்வைத்துள்ளனர். அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக் கப்படும். பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் பெண்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் திட்டம் வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்கும். டீசல் விலை அதிகரித்து வருவதால் பசுமைப் பேருந்துகள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் பேருந்துகளை விட பசுமைறப் பேருந் துகள் விலை அதிகமாக

உள்ளது. போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமைகளை முழு மையாக அடைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் நினைப்பதை செயல்படுத்துவது தான் எங்கள் நோக்கம்.ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் 

தமிழக போக்குவரத்துத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்                     

ஒரே தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உள்ளே பேருந்து சேவை தொடங்கியுள்ளது. 19,200 பேருந்துகளில் 14.215 பேருந்துகள் இயக்கப்பட் டது வருவாய் சீராக வரு கிறது.

. எஸ்.இ.டி.சி பேருந்துகளில் 1,300 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள்

தேவை உள்ளது. 

போக்குவரத்துக்கழம் 33 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது

10 நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் திருக்கு 

றள் பலகைகள் முழுமை யாக நிறுவப்பட்டுவிடும். கடந்த அரசில் டெண்டர் போட்டு தான் பேருந்தை சுத்தப்படுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டது

தற்போது ஒரு பேருந் துக்கு சுத்தம் செய்ய 33 ரூபாய் மிச்சம் செய்யப் படுகிறது. போக்குவரத் துத்துறையை சீரமைக்க வேண்டி உள்ளது. ஏராளமான குறைபாடுகள் உள்ளன.

இதை நிவர்த்தி செய் யும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா