இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது


நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 37.60 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை, 37,60,32,586 தடுப்பூசிகள்,  48,33,797 அமர்வுகளில் போடப்பட்டன.  கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 தடுப்பூசிகள் போடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 41,506 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கடந்த 14 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 50,000க்கும் கீழ் உள்ளது.

நாட்டில் இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,54,118.  இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.47 சதவீதம்.

நாட்டில் இதுவரை 2,99,75,064 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41,526 பேர் குணமடைந்துள்ளனர்.  இவர்களின் சதவீதம் 97.20 சதவீதம்.  இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 18,43,500 பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 43 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் வாராந்திர பாதிப்பு வீதம் குறைந்து வருகிறது.  வாராந்திர பாதிப்பு வீதம் தற்போது, 2.32 சதவீதமாக உள்ளது.  தினசரி பாதிப்பு வீதம், தொடர்ந்து கடந்த 20 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா