விமான போக்குவரத்து துறை அமைச்சராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா, இணையமைச்சராக ஜெனரல் வி.கே.சிங் பொறுப்பேற்பு

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமான போக்குவரத்து துறை அமைச்சராக திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா, இணையமைச்சராக ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் பொறுப்பேற்பு

விமான போக்குவரத்து துறை அமைச்சராக திரு ஜோதிர் ஆதித்யா மாதவ்ராவ் சிந்தியா இன்று பொறுப்பேற்றார். இது குறித்து சுட்டுரையில் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா கூறுகையில், ‘‘திரு ஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து விமான போக்குவரத்து அமைச்சக பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. எனது கடமைகளை நேர்மையுடன் செய்யவும், திரு ஹர்தீப் சிங் பூரி மேற்கொண்ட நல்ல பணிகளை தொடரவும் நான் உறுதியுடன் உள்ளேன்’’என்றார்.

இதற்கு முன்பு திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக கடந்த 2007-2009ம் ஆண்டு வரையும், வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராக  2009ம் ஆண்டு முதல் 2012ம் வரையும், மின்துறை இணையமைச்சராக கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையும் இருந்தார்.

இவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார்.


விமான போக்குவரத்து துறை இணையமைச்சராக ஜெனரல்(ஓய்வு) டாக்டர் விஜய் குமார் சிங் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மத்திய அரசில் பல பொறுப்புகளில் இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா