இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ராணுவத் தளபதி பயணம்

பாதுகாப்பு அமைச்சகம் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ராணுவத் தளபதி பயணம்ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு நாளை முதல்(ஜூலை 5ம்தேதி) ஜூலை 8ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்த நான்கு நாள் பயணத்தில், இந்த இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளை ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் நரவாணே சந்தித்து இரு நாடுகள் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இங்கிலாந்தில் ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் பயணம் செய்யும் ஜெனரல் நரவாணே, இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தளபதி மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்குள்ள ராணுவ மையங்கள் பலவற்றுக்கும் செல்லும் ஜெனரல் நரவாணே, பரஸ்பர நலன் குறித்த கருத்துக்கள் மற்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இரண்டாவது பயணமாக ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், இத்தாலி செல்லும் ஜெனரல் நரவாணே, அந்நாட்டு பாதுகாப்புப்படை தலைவர் மற்றும் ராணுவ தளபதி ஆகியேரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  மேலும், இத்தாலியில் உள்ள பிரபல கேசினோ நகரில் இந்திய ராணுவ நினைவிடத்தையும், ஜெனரல் நரவாணே தொடங்கி வைக்கிறார். ரோம் நகரில் உள்ள செச்சிங்கோலா என்ற இடத்தில் உள்ள வெடிகுண்டு செயலிழப்பு மையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து ஜெனரல் நரவாணேவுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா