மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க சாலக் மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவு உதவி ஆணையர் பணி விடுவிப்பு

 மதுரை மாநகருக்கு ஆர்.எஸ்.எஸ். சர் சங்க காலக் (தலைவர்) மோகன் பகவத் வருகை மாநகராட்சி உத்தரவுமதுரை மாநகருக்கு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் வருகைக்காக  மாநகராட்சிச் சாலைகளைச் சீரமைத்து, தெருக்களைப் பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார் நாக்பூரிலிருந்து

மதுரை மாநகரில் நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜூலை 22 ஆம் தேதி மதுரை வரும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்

மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும் பகுதிகளிலுள்ள சாலைகளைச் சீரமைத்தும், தூய்மையாக வைத்தும், தெரு விளக்குகளைப் பராமரிக்க வேண்டுமென்றும், அவரது வருகையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் முன்பே கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர், குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் வரும்போது இதுபோன்ற உத்தரவுகள் வரும் மற்ற தலைவர்களுக்கு இது பொருந்துமா என்று சிலர் கேள்வி எழுப்பியது காரணமாகவும் 

மேலும் இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சு.வெங்கடேசன், "அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்‘இசட் பிளஸ் பாதுகாப்பிலுள்ள முக்கிய பிரமுகருக்குச் செய்ய வேண்டிய அடிப்படை நடைமுறைகள் தான் இது. வேற எந்தக் கூடுதல் ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு பெற்றவர்கள் செல்லும் சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக சரியாக இருக்க வேண்டும். உயர் பாதுகாப்பு விஐபிகள் வரும்போது இதைப்போன்ற ஏற்பாடுகள் செய்வது நடைமுறையிலுள்ளது தான். இது வேறு மாதிரி புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு வழக்கமாகச் சொல்வது தான். அதற்காக உத்தரவு போடத் தேவையில்லை. புதிதாக வந்த உதவி ஆணையாளர் அப்படிச் விட்டார். மற்றபடி கூடுதலாக எந்த ஏற்பாடுமில்லை. உயர் பாதுகாப்பு முக்கியப் பிரமுகர்களுக்குச் செய்யும் வழக்கமான நடைமுறை தான்" என்பதை விளக்கி மாநகராட்சி ஆணையாளரால் அறிக்கையும் தரப்பட்டுள்ளதனிடையே மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வரும் சண்முகம், 21 ஜூலை 2021 பிற்பகல் முதல் மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். ஆனால் குறிப்பாணை வழங்கியவர் அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதாகட்டும்.மதுரை மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் 20 ஜூலை 2021 லா துணை நிலை ஆட்சியர் ஒருவர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மூலமும் காரணமுமாகும்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சுகாதாரத் துறை ஆணையாளர் ஒருவர் அட்டவணைப் பட்டியல் இனப்பிரிவு ஆணையத்திற்கு வழங்கிய புகாரை அடுத்துத் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஜக மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பரிவார்களிடம் எதற்கு வீண் பொல்லாப்பு என தனது அடுத்த நிலை ஊழியருக்கு உத்தரவு வழங்கியதன் விளைவே அவர் தந்த உத்தரவு. ஆனால் 21 ஜூலை 2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி மாறுதல் செய்யாமல் கீழ் நிலை ஊழியர் ஒருவர் மீது நடவடிக்கை மதுரை மாவட்ட ஆட்சியரும், அதனை வெளிகொண்டு வந்த மதுரை கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராலும் பலிகிடாவாக்க்கப்பட்டுள்ளார். 


இடது சாரி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிடும் முன்பாக இதை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் இதில் பொதுவாக நீதி எதுவெனில் வள்ளுவர் வாக்கில் பதில் கூறுவதானால்  

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

இது குறித்து விசாரணை வருமா என்பதும்.  இது யார் தவறு பலிகடா ஆக்கப்பட்ட  அரசு ஊழியர் நீதிமன்றம் சென்றால் அதன் நிலை இனி இது போன்ற விபரங்கள் தீர்வாகும் இப்போது இது விவாதமாகியுள்ள நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா