புகழ்பெற்ற நடிகர் திரு திலீப் குமார் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல்

 குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

புகழ்பெற்ற நடிகர் திரு திலீப் குமார் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல்


புகழ்பெற்ற நடிகர் திரு திலீப் குமார் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசு துணைத் தலைவர் கூறுகையில், திரு திலீப் குமார்  மரணம் சினிமா உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்றார்.

விதிவிலக்கான நடிகரின் பன்முக திறனை நினைவுக் கூர்ந்த திரு வெங்கையா நாயுடு, ‘‘சோக கதாபாத்திரங்களின் மன்னர் என அழைக்கப்பட்டாலும், இந்த பிரபல நடிகர் பன்முக திறன்களை வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். சமூக நாடகங்கள் முதல் காதல் கதாநாயகன் வரை பல கதாபாத்திரங்களில் சமமாக நடித்தார் ’’ என்று கூறியுள்ளார்.   

உலக சினிமாவுக்கு திரு திலீப் குமாரின் பங்களிப்பை குறிப்பிட்ட திரு வெங்கையா நாயுடு, ‘‘ நடிப்பின் மாறுபட்ட திறன்களை புரிந்துகொள்வதில் அவரது அளவற்ற பங்களிப்பை, இந்தி சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்கள் சிலர்  ஒப்புக்கொள்கிறார்கள்’’ என குறிப்பிட்டார். 

திரு திலீப் குமாரின் சிறப்பான கதாபாத்திரங்களை நினைவுக் கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், ‘‘அமர், நயா தார், கங்கா ஜும்னா, மதுமதி, ராம் அவுர் ஷ்யாம் போன்ற திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்களில் சில நினைவில் நிற்கின்றன’’ என்றார். ‘‘ இந்த இயற்கையான நடிகர், தனித்துவமான நடிகனாக பார்க்கப்பட்டார் மற்றும் இந்திய சினிமாவில் நடிப்பு முறையை கொண்டு வந்த பெருமைக்குரியவர்’’ எனவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

திரு திலீப் குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது ரசிகர் பெருமக்களுக்கும் குடியரசு துணைத் தலைவர் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பழம்பெரும் நடிகர் திரு.திலீப் குமார் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு நமது கலாச்சார உலகத்திற்கு பேரிழப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரைப்பட உலகின் பெரும் ஆளுமையாக திரு.திலீப் குமார் அவர்கள் என்றும் நினைவு கூரப்படுவார். ஈடு இணையற்ற அறிவாற்றல் மிகுந்த அவர், தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் மறைவு, நமது கலாச்சார உலகத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஏராளமான ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா