ஜார்க்கண்ட் மாநிலத்தில். பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்

தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்.


பாதிரியார் ஸ்டேன் சுவாமி மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த நிலையில்

அவர்  திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. அவர் சார்ந்துள்ள சமூக செயற்பாட்டாளரானவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களை சார்ந்த கிருத்துவ சமயப் பணியாற்றினார். 84 வயதானவர், மகாராஷ்டிரா பீமா- கோரேகாவ் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 2020 ஆம் ஆண்டில் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், இவருக்கு ஜாமீன்  கிடைக்கவில்லை. பார்கின்சன் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டு உத்தரவின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இடையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்ட

நிலையில், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் பலனின்றி இன்று மதியம்  உயிரிழந்த தகவலை அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்தனர். 

மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் கேட்டு, ஸ்டேன் சுவாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், அவர் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் தொற்று, பார்கின்சன் நோய் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் தான் ஸ்டேன் சுவாமியின் இறப்புக்கு காரணமாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் இயன் டிசவுசா தெரிவித்தார்.

தலோஜா சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும், அவர்கள் பாதிரியாருக்கு உடனடி மருத்துவ சிகிச்சையை வழங்கத் தவறிவிட்டதாகவும், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா