துப்புரவாளர் பணியில் சேர்ந்து பணி செய்யாமல் ஏமாற்றிய நபர்கள் மீண்டும் பணிக்கு மாற்றம் செய்து ஆணையர் நடவடிக்கை

எந்தப் பணியில் சேர்ந்தார்களோ அந்த  வேலையைச் செய்யணும்:


ஏமாற்றியவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை! கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோயமுத்தூரில், நேரடி நியமன முறையில் நியமித்த, 325 தெருக்களில் சுத்தம் செய்யும் துாய்மைப் பணியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் கையூட்டு காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாற்றுப்பணியை, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் ரத்து செய்தார். 

குப்பை அள்ளும் பணிக்காக, வார்டுகளுக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில், 549 குப்பைகள் அகற்றும் துாய்மைப் பணியாளர் பணியிடம் காலியாக இருந்த

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நேரடி நியமன முறையில், புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்வித்தகுதி அவசியமில்லை; அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாமென அறிவித்ததால், பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து, வேலையில் சேர்ந்தனர். 

இதில், 325 பேர் இதர ஜாதியினர். அரசியலில் பதவியில் இருந்த பலருக்கு  நெருங்கிய செல்வாக்குள்ள பலரும், குப்பை அள்ளச் செல்லாமல், மாற்றுப்பணியைப் பெற்று, அலுவலகத்தில் வேலை செய்தனர். 

பலருக்கும், கொரோனா கட்டுப்பாட்டு மையம் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் வருவாய் பிரிவு வேலை வழங்கப்பட்டிருந்தது.

சிலர் வேலையே செய்யாமல், ஓராண்டாக சம்பளமும் பெற்று வந்தனர். 

இதற்கு,.         உண்மையிலேயே குப்பை அள்ளும் பணி செய்த துாய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஏனெனில், துாய்மை பணியாளர்களில், பட்டம் படித்தவர்கள் மற்றும் சீனியாரிட்டியில் காத்திருப்போருக்கு, இளநிலை உதவியாளர் பணி வழங்க, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை செயல்படுத்தாமல், புதிதாக துாய்மை பணிக்கு எடுத்தவர்களை அமர்த்தியதால், ஜாதி ரீதியாக, தங்களை பிரித்து, அலுவல் வேலை கொடுக்க மறுப்பதாக, அவர்கள் குற்றம் சாட்டினர்.

இப்பிரச்னை தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால், மண்டல உதவி ஆணையர்களிடம் விசாரித்தார்.

மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களைக் கேட்டறிந்த ஆணையர், அவர்களை வார்டு குப்பை அள்ளும் பணிக்கு மாற்றினார்.

நியமன உத்தரவுப்படி, குப்பை அள்ளும் பணிக்கு அனுப்ப உத்தரவிட்டார். 

அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் பணியாற்றிய அந்த ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு, வார்டுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆணையரின் இந்த உத்தரவால், இது வரை சொகுசாகவும், வேலை பார்க்காமலும் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் உண்மையான பணி செய்த நபர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.இதேபோல் பிற மாவட்டங்களில் கிராம தலையாரி வேலை பெற்றவர்கள் அலுவலகம் சார்ந்த பணி செய்யும் நிலையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபிற நேர் வழியில் பணி செய்யும் ஊழியர்கள் கருத்தாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா