தமிழ்நாடு முதல்வருக்கு நடந்தது வழக்கமான மருத்துவப் பரிசோதனை தான் இராமசந்திரா மருத்துவமனை விளக்கம

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நடந்தது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் இராமசந்திரா மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.        இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து முதல்வர் கிளம்பினார்.முதல்வர் சென்னை இராமசந்திரா மருத்துவமனைக்கு தனது உடல் பரிசோதனைக்காக போரூருக்கு இன்று காலை 7 மணிக்கு வந்தார். மருத்துவமனையிலுள்ள இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலத்திடம் தனது உடல் நலம் குறித்து பரிசோதனை செய்து கொண்டதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பலத்த காவல் பாதுகாப்புப் போடப்பட்டது

காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணி வரை மருத்துவமனையில் உடல் நிலை குறித்து பரிசோதனை மேற்கொண்டார் .முதல்வர் ஸ்டாலின் 2 மணி நேர பரிசோதனைக்கு பின்பு மருத்துவமனையிலிருந்து கிளம்பினார். 
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இராமசந்திரா மருத்துவமனை, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கு முதல்வர் அவர்கள் வந்தார்கள். முழு உடல் பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா