பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் - ஈஸ் 4.0-ஐ நிதி அமைச்சர் வெளியிட்டார்

நிதி அமைச்சகம்  பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் - ஈஸ் 4.0-ஐ நிதி அமைச்சர் வெளியிட்டார்


தொழில்நுட்பம் சார்ந்த, எளிமையான மற்றும் கூட்டு வங்கியியலுக்கான 2021-22-ம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் - ஈஸ் 4.0 எனும் நான்காம் பதிப்பை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராம் இன்று வெளியிட்டார்.

2020-21-ம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் - ஈஸ் 3.0-வின் வருடாந்திர அறிக்கையையும் வெளியிட்ட அவர், ஈஸ் 3.0  வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கிய வங்கிகளை கவுரவிப்பதற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
நிதி சேவைகள் துறையின் கூடுதல் செயலாளர்கள் திரு பங்கஜ் யின் மற்றும் திரு அமித் அகர்வால் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் திரு ராஜ்கிரன் ராய் ஜி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஈஸ் 3.0  வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கியதற்கான பரிசுகளை பெற்றன

.

நல்ல லாபங்களை ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகின்றன. 2020 நிதியாண்டில் ஏற்பட்ட ரூ 26,016 கோடி நஷ்டத்துடன் ஒப்பிடும் போது, 2021 நிதியாண்டில் ரூ 31,817 கோடி லாபத்தை இந்த வங்கிகள் ஈட்டியுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்