பாராலிம்பிக்ஸ் போட்டிகள்: இந்தியாவிலிருந்து 54 பேர் பங்கேற்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பாராலிம்பிக்ஸ் போட்டிகள்: இந்தியாவிலிருந்து 54 பேர் பங்கேற்பு


டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், நீச்சல், பளுதூக்கல் உட்பட 9 போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 54 வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அனைத்து வீரர்களுமே டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் பங்குபெறுகிறார்கள்.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பவீனா படேல் மற்றும் சோனல்பென் ஆகியோர் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலாக இருக்கிறார்கள். அவர்கள், மகளிர் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் விளையாடவிருப்பதுடன், மகளிர் இரட்டையர் பிரிவிலும் இணைந்து போட்டியிடவிருக்கின்றனர்.


போட்டியின் துவக்க நாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதி, டோக்கியோவில் நடைபெறும் தகுதிச் சுற்றுகளில் அவர்கள் இருவரும் பங்குபெறுவார்கள். தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும்.


அகமதாபாத்தில் உள்ள கண்பார்வையற்றோர் மக்கள் சங்கத்தில் லாலன் தோஷியிடம் இருவரும் பயிற்சி பெறுகிறார்கள். உலக தர வரிசையில், பவினா 18-ஆவது இடத்திலும், சோனல்பென் 19-ஆம் இடத்திலும் உள்ளனர். இருவரும் சர்தார் பட்டேல் மற்றும் ஏகலைவ விருதுகளைப் பெற்றிருப்பதுடன், ஆசியப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்திய அரசின் உதவிகளையும் அவர்கள் பெற்றுள்ளனர்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்