முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடு முழுவதும் 75-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

பிரதமர் அலுவலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.





அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

அனைவருக்கும் 75-ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். விடுதலையின் அம்ருத் மஹோத்சவம், நாட்டு மக்களிடையே புதிய ஆற்றலையும், உணர்வு நிலையையும் புகுத்தட்டும். ஜெய்ஹிந்த்”, என்று கூறியுள்ளார்.            75- ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 75- ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம். நிறுவனத்தின் இயக்குநர் சிப்நாத் தேவ், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் கோபிநாத்பிரதமர் அலுவலகம்உள்துறை அமைச்சகம்

75வது சுதந்திர தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில், நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தொடர் சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

‘‘இந்த மாபெரும் நாளில், நாட்டை பாதுகாத்த நமது தைரியமிக்க வீரர்கள், சுதந்திர போராட்டத்துக்காக தங்களின் அனைத்தையும்  வழங்கிய மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டுக்கு சேவை செய்ய எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’.

‘‘ஒரு புறம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொடுகிறது மற்றொரு புறம் ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்கள்,  பிரதான வாழ்கையின் ஒரு பகுதியாக மாறியதில் பெருமை படுகின்றனர்.  விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை நாடு கொண்டாடும்போது, வாருங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்குவதில் இணைந்திருப்போம்’’.

செங்கோட்டையிலிருந்து பிரதமரின் பேச்சை குறிப்பிட்ட திரு அமித் ஷா கூறுகையில், ‘‘ புதிய இந்தியாவின் திறமை, வரலாற்று சீர்திருத்தங்கள் மற்றும் தீர்வுகளின் முன்னேற்றத்துடன்,  இந்தியாவை உலகின் முன்னணி நாடாக  மாற்ற நமது மகத்தான திறன்களை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அவரது உரை,  தற்சார்பு இந்தியாவின்  உடைக்க முடியாத உறுதியின் அடையாளமாகும்"75 ஆவது சுதந்திர தின விழா புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியின் தலைமை மருத்துவர்  பூவதி இரத்த வங்கி மருத்துவர் ஆகியோர் மரம் அறக்கட்டளையின் செயல்பாட்டைப் பாராட்டி அதன் நிர்வாக இயக்குனர் மரம் இராஜாவுக்கு


கேடயமும்,பாராட்டுச்சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.

சென்னையில் உள்ள, இந்திய உணவுக் கழக தென் மண்டல அலுவலகத்தில் சுதந்திரதின விழா

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில், அதன் செயல் இயக்குநர் திரு ஆர்.டி நசீம் ஐஏஎஸ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டுக்கும், இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்தொற்று நேரத்தில் கடந்த ஒராண்டாக இந்திய உணவுக் கழகம் செய்த பணிகளை அவர் நினைவுக்கூர்ந்தார். தேசிய ஊரடங்கு காலத்திலும், இந்தியக் உணவுக் கழக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உணவு தானியங்களை தொடர்ந்து கொள்முதல் செய்து, சேமித்து வைத்து அவற்றை லாரிகள், ரயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினர் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள், ஊரடங்குகள் போன்ற பல தடைகளையும் மீறி ரேசன் கடைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விநியோகிக்கப்பட்டன.

இதன் காரணமாக பலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாயினர்.  சில அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பலியாயினர்.

81 கோடி இந்தியர்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் வழக்கமான அரிசி மற்றும் கோதுமை விநியோகத்தை இந்திய உணவுக் கழகம் உறுதி செய்ததோடு, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மூலம் மக்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் பெற்றனர். சிக்கலான நேரங்களில் மக்கள் பட்டினியுடன் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்தது.



இந்திய உணவுக் கழகம் செய்த சாதனை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பாராட்டப்பட்டது.

நமது நாட்டை உணவு மிகை நாடாக மாற்றியதில், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்பை அவர் நினைவுக் கூர்ந்தார். இதன் காரணமாக நாட்டில் இந்திய உணவுக் கழகங்களின் சேமிப்பு கிடங்குகள் நிறைந்து கிடப்பது மட்டும் அல்லாமல் கூடுதல் உணவு தானியங்களை பல நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்திலும், செழிப்புக்கும், உலகின் மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்புக்கும் ஜொலிக்கும் உதாரணமாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என திரு ஆர்.டி நசீம் நம்பிக்கை தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை

சுதந்திர தினத்தன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட் சென்றார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மக்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கி நாம் பணியாற்றுகையில், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகம்    சுதந்திர தினதத்தன்று தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட் சென்றார்.

“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன். மக்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கி நாம் பணியாற்றுகையில், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன”, என்று கூறியுள்ளார்.   








 தமிழ்நாடு தலைமைச்செயலக கோட்டைக் கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு விருதுகளைப் பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின வழங்கினார்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த 75 வது சுதந்திர தின விழாவில், நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி. புதுக்கோட்டை                திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியை அருட்சகோதரி சி.ஜோஸ்பின் மேரிFBS. முன்னிலையில்  காவல்துறை சார்ந்த லெட்சுமி  காலை 9.00 மணிக்கு கொடியேற்றினார்கள்.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விடுதலை நாள் விழாவில் தலைமையாசிரியைநாம் அனைவரும் தேசப்பற்று உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாடானாலும்,சபையானாலும் ,வீடானாலும் சரி நாம் Number ஆக இல்லாமல் Member இருந்து செயல்பட வேண்டும்.இந்த உறுதியான எண்ணத்துடன் நாம் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.ஆசிரியைகள், அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்தும்,முகக்கவசம் அணிந்தும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.     தலைமையாசிரியர் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது .   காஞ்சிபுரம் திருவள்ளூர ஊடக உரிமைக்  குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 75- வது சுதந்திர தின விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் குருகுலம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி,காலை உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த சுதந்திர தின விழா நிகழ்வில் மாநில தலைவர்.V.C.P.அம்பலவாணன், பொதுச் செயலாளர்.வி.எம்.தமிழன் வடிவேல்,பொருளாளர்.நரியார்‌.அ.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் பயணம் ஆசிரியர் புருஸ்லீ தேவன், டெல்லி முதன்மை நிருபர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்பான நிகழ்வினை காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பா.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளான பாலா விக்னேஷ், பாலாஜி, புருஷோத்தமன், செல்வம்,விக்கி என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்..75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் , அண்ணா விளையாட்டு அரங்கில்  மூவண்ண கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  மேலும் கொரோனா மற்றும் தேர்தல் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அதிகாரிகள் , போலீசார் , மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 202 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.                                  காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக. காரைக்குடி சுழல் சங்கத்தின் தலைவர்  Rtn. T. திஷாந்த் குமார்   செயலர்


Rtn.S.சிவசுப்பிரமணியம் . Rtn.P.நடராஜன், மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் காரை.Rtn.G. முத்துக்குமார், Rtn. சோமசுந்தரம் . Rtn. சேவுகன் Rtn.சரவணகுமார்  கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சிவகங்கை ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான பிரபாகரன், விநாயகம்,, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்   Rtn. T. திஷாந்த் குமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். 

பிறகு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நாட்டுப்பண் பாட விழா நிறைவுற்றது.                                சிவகங்கை அரண்மனை வளாகத்தில் 75 வது சுதந்திர தினவிழா

மேதகு இராணி DSK மதுராந்தகி நாச்சியாரின் முன்னிலையில் 




சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டுக் கழகம் சார்பிலும்  இணைந்து நடத்தும் 

திருச்சி புதிய உதயம் குழுவினர் வழங்கும் இராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று நாடகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

https://youtube.com/c/SouthZoneCulturalCentreThanjavur

இடம் : சிவகங்கை அரண்மனை வளாகத்தில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...