பதக்கம் இல்லை என்பதை விட முயற்சியால் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துத் தடம் பதித்த கிராமத்து ரேவதி

பதக்கம் இல்லை என்பதை விட முயற்சியால் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துத் தடம் பதித்த கிராமத்து ரேவதி.                     


ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது. என்றார்.. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா முதல் முறையாக 7 பதக்கங்களை வென்றது. ஜூலை மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 32 வது ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த அணிகளுடன் ஒலிம்பிக் கமிட்டியின் அகதிகள் அணியும் களமிறங்கியது. இந்தியா சார்பில்  126 வீரர், வீராங்கனைகள்  குழு பங்கேற்றது.பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும், மகளிர் பேட்மின்டனில் பி.வி.சிந்துவும், குத்துச்சண்டையில் லவ்லினாவும் வெண்கலம் வென்றனர். மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா வெள்ளியும், பஜ்ரங் புனியா வெண்கலமும் வென்றனர். ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றது புதிய சாதனை. 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கம் மட்டுமே வென்றது அதிகபட்சமாக நீரஜ் சோப்ரா வென்ற தங்கத்தால் ஒரேயடியாக 20 இடங்கள் முன்னேறிய இந்தியா இறுதி பதக்கப் பட்டியலில் 48 வது இடம் பிடித்தது. அமெரிக்கா முதலிடம்: கடைசி நாளான நேற்று மகளிர் கூடைப்பந்து, ஆண்கள் குத்துச்சண்டை (63 கிலோ), சைக்கிளிங் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க அணி.39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தம் 113 பதக்கங்களுடன் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. சீனா மொத்தம் 88 பதக்கங்களை வென்று (38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம்) 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஜப்பான் 3வது இடமும், இங்கிலாந்து, ஒலிம்பிக் அகதிகள் அணி முறையே 4வது, 5வது இடத்தை பிடித்தன.

நிறைவு விழாவில் பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுயுடன். நிறைவு விழா அணிவகுப்பில், இந்தியா சார்பில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தார்.. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், 32 வது ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதாக அறிவித்தார்.


பின்னர் பேசிய அவர், ‘ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் சவாலான போட்டித் தொடரை நடத்தி முடித்துள்ளோம். என்றார். ஒலிம்பிக் கீதம் இசைக்க கொடி கீழிறக்கப்பட்டு அதை டோக்கியோ கவர்னர் தாமஸ் பாக்கிடம் ஒப்படைத்தார். அவர் அதை அடுத்த ஒலிம்பிக் போட்டியை 2024 ஆம் ஆண்டு நடத்த உள்ள பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர மேயரிடம் வழங்கினார். பின்னர் பிரான்ஸ் தேசிய கீதம் இசைக்க அந்நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது. இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட, வாணவேடிக்கையில் டோக்கியோ நகரமே வண்ணமயமாகச் ஜொலித்தது. அடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி இம்மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கி செப்டம்பர். 5ஆம் தேதி வரை நடைபெறும்.   டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு திரும்பிய  மதுரை மாவட்டத்தின் சக்கிமங்கலம் தடகள வீராங்கனை ரேவதி.
தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்றார் 

4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையும் 5 ஆம் வகுப்புப் படிக்கும் போது தாயையும் இழந்து இவரும் தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்தவர்கள்.


அவர் கூறும்போது

"நான் 2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு விடுதியில் தங்கிப் படித்தேன். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதைப் பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரணப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தார். நான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள மோட்டார் பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன்.

அப்போது பயிற்சியாளர் கண்ணன் “உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்டத் தேவையில்லை” என்றார்.

அதனால் நான் அந்தக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு சேர்ந்தேன். அப்போது எனக்கு இளைப்பு நோய்  காரணமாக நான் மிகவும்  பாதிக்கப்பட்டேன். கல்லூரியில் முதலாமாண்டு படிப்பைக் கைவிட வேண்டி இருந்தது.

நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து, பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்கத் தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவினார்.

நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்து பாட்டி மற்றும் தங்கையைப் பராமரிக்கிறேன்.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக இருந்தது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்தேன். எனது அடுத்த முயற்சியில்

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள். என்ற ரேவதி விளையாட்டு சூழலில் வாழ்க்கை முறை அமைந்தால் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வார்.                                                   "நான் ஓடுகையில் Patterning கில் சில தவறுகள் ஏற்பட்டு விட்டது, அதனால் வெற்றி வாய்ப்பு இழந்தோம். அடுத்தடுத்த போட்டிகளில் அந்தத் தவறை சரி செய்வோம்.ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு இந்த முறை அரசின் ஒத்துழைப்பு இருந்தது. வரும் காலங்களில்  இன்னும் அதிகமாக அரசின் ஒத்துழைப்பு இருந்தால், வீரர்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.என் போன்ற கிராமத்து பெண்களுக்கு இயல்பாகவே ஒடும் திறன் அதிகமாக இருக்கும். அந்த வகையில், கிராமப்புற மாணவர்களை அரசு அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். மதுரையில் இருந்து சென்று டோக்கியோ மண்ணில் முதன்முறையாக ஓடுகையில் எனக்கு அழுகை வந்தது. அந்த கணத்தில் என்னை தைரியமாக என் தாய் தந்தை இல்லாத நிலையில் என்னை ஆளாக்கிய என் பாட்டியை நினைத்து கண்கள் கலங்கின.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று என்னை வளர்த்து ஊக்குவித்த என் பாட்டி ஆரம்மாளுக்கும், எனக்குள் இருந்த ஒடும் திறனை கண்டுபிடித்த பயிற்சியாளர் கண்ணனுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறு வயதிலிருந்தே ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். இப்போது அது நிறைவேறியது. முதல் போட்டியில் யாராலும் பதக்கம் வெல்ல முடியாது. எனவே, ஒலிம்பிக்கில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டையும் சிறப்பாக விளையாடுங்கள். நிச்சயம் உங்கள் ஒலிம்பிக் கனவுகள் நிறைவேறும்’ என்றார்.   மேலும்  ஒலிம்பிக் போட்டி முடிந்து திருச்சிராப்பள்ளி திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி மற்றும் சுபா
ஆகியோற்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மகிழ்வுடன் ஊர் திரும்பிய தனலட்சுமிக்கு அவரது அக்கா இறந்த செய்தியை கூறவே, விமான நிலையத்திலே தனலட்சுமி கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.   விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்    வாழ்வியல் துன்பம் அதிகம்  முதல் வறுமை ஒழிப்பு மற்றும் பயிற்சி வசதி மற்றும் வாழ்க்கை முறை மாறுதல் கவலை இல்லா சுதந்திரம்  தேவை. ஆம் உண்மை தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள விளையாட்டுக் கட்டமைப்பு நமக்கு இல்லை, கிராமத்தில் சிறுவன் ஒருவன் மிகவும் ஏழ்மையான பையன் 20 அடி உயரத்தில் தாண்டிக் குதித்து பலர் பாராட்டும் நிலையில் அவன் முயற்சியில் பயன் படுத்தும் கருவி எது நீங்கள் படத்தை பாருங்கள் புரியும்
அது அவனே வெட்டி வந்து அமைத்துள்ள சீமைக்கருவேல மரக் குச்சிகள் இவன் விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக யாரை அனுகவேண்டும் என்பது தெரியவில்லை அந்த மக்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லை. வாகை சூடியவர் பலர் பலநாள் வாய்ப்பு வரும் எனக் காத்திருந்தவர்களே  இதிலிருந்து ஒலிம்பிக் மெடல் கனவுகள் பலிக்கும் காலம் வர திறமையான நபர்கள் தவம் செய்யவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்