புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நிலஅதிர்வு விவரத் தொகுப்பு மக்களவையில் தகவல்

புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நிலஅதிர்வு விவரத் தொகுப்பு  மக்களவையில் தகவல்நில அதிர்வு விவரங்கள், புயல் எச்சரிக்கை மையங்கள் ஆகியவை குறித்து மக்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

நிலஅதிர்வு விவர தொகுப்பு:

நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கங்களின் வரலாற்று பதிவுகளை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் 59 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்கத்துக்கு வெவ்வேறு அளவிலான தீவிரத்துடன் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் நிலநடுக்க மண்டல வரைபடத்தின்படி, மொத்த பகுதியும் நான்கு நிலநடுக்க மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது. 5வது மண்டலத்தில் உள்ள பகுதி மிகவும் பாதிப்புக்கு ஆளாகும் பகுதி. 2வது மண்டலத்தில் உள்ள பகுதியில், நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருக்கும். தோராயமாக நாட்டின் 11 சதவீத பகுதி 5வது மண்டலத்துக்குள் வருகிறது. 18 சதவீத பகுதி 4வது மண்டலத்துக்குள்ளும், 30 சதவீத பகுதி, 3வது மண்டலத்துக்குள்ளும், மீத பகுதிகள் 2வது மண்டலத்துக்குள்ளும் வரும்.

ஆர்டிக் அறிவியல் அமைப்பின் 3வது கூட்டம்:

ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகியவை இணைந்து நடத்திய ஆர்க்டிக் அறிவியல் அமைப்பின் 3வது கூட்டத்தில், இந்தியா பங்கெடுத்தது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு அப்போதைய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.

புயல் எச்சரிக்கை மையங்கள்:

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில்,  7 புயல் எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 3 மையங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உள்ளன. மற்ற 4 மையங்கள் அகமதாபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வரில் உள்ளன. எந்தெந்த பகுதிகளுக்கு, எந்த மையங்கள் முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கீழ்கண்ட இணைப்பில் உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடலோர பகுதியில் புயல் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை:

கடல் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, அரபிக் கடலில் புயல்கள் உருவாவது சமீபத்தில் அதிகரிக்கிறது.  குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கும்,  மேற்கு கடேலாரத்தில் உள்ள டாமன், டையூ தத்ரா மற்றும் நகர் ஹவேலி, லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன.  இவற்றின் மூலம் முன்னெச்சரிக்கைகள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு புயல் பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா