பார்சி புத்தாண்டான நவ்ரோஸ், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து


குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பார்சி புத்தாண்டான நவ்ரோஸ், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
பார்சி புத்தாண்டான நவ்ரோஸ்,  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில்,

“பார்சி புத்தாண்டின் துவக்கத்தைக் குறிக்கும் நவ்ரோஸ் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரம்பரிய முறைப்படி சிறப்பாகக் கொண்டாடப்படும் நவ்ரோஸ், சகோதரத்துவம், கருணை, அனைவருக்கும் மதிப்பளித்தல் ஆகிய உணர்வுகளை எடுத்துரைக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பார்சி சமூகம், மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

உறவுகள், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் நண்பர்களும் குடும்பத்தினரும் ஒன்றாக இணையும் தருணமாக நவ்ரோஸ் விளங்குகிறது. கொவிட் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மிகவும் எச்சரிக்கையுடன் நவரோஸ் திருநாளை கொண்டாடுமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

வரும் ஆண்டு, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை நம் அனைவரது வாழ்விலும் ஏற்படுத்தட்டும். அனைவருக்கும் நவ்ரோஸ் தின நல்வாழ்த்துகள்”, என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்