தமிழ் மாநில அணைத்து செய்தியாளர் சம்மேளனம்' துவக்க அறிமுகக் கூட்டம்

 'தமிழ் மாநில அணைத்து செய்தியாளர் சம்மேளனம்' துவக்க அறிமுகக் கூட்டம்  இன்று 2021 ஆகஸ்ட் முதல் நாள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில்
"சூப்பர் குரூப்" செய்தியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிய முதல் கூட்டம் நடந்தது. 

தேவகோட்டை நகர் ஊராட்சி ஒன்றியம் அருகிலுள்ள  அரவிந்த் ஹோட்டல் கூட்ட அரங்கில் மூத்த பத்திரிகையாளர்கள் காலம்சென்ற"சூறாவளி லட்சுமணன்" "பி.டி.ஐ.நீலமேகம்" நினைவில் வைத்து. காலை:10.30 மணியளவில் துவங்கியது

இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலச் செய்தியாளர்கள் செய்தித்துறை சார்ந்த இந்திய அரசில் பதிவு செய்து அனுமதிக்கப்பட்ட இதழ்களில் பணி செய்யும் செய்தியாளர்களின் நலனுக்காக 

"சூப்பர் குரூப்" செய்தியாளர் குழுவில் இணைந்துள்ள செய்தியாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து மூத்த பத்திரிகையாளர் நேமத்தான்பட்டி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு இதழ்களில் பணி செய்யும் செய்தியாளர்கள்

சமூக இடைவெளியுடன், கொரானா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட சூப்பர் குரூப் கூட்டம் பற்றிய தகவல் தெரிந்தவுடன் தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ஒரு பிரிவு மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். தேவகோட்டை மூத்த செய்தியாளர் "மதன்ஸ்" ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்வு துவங்கியது.சூப்பர் குரூப் செய்தியாளர் குழுவின் முக்கிய நபர்களின் ஆலோசனையின் போது சென்னை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் துவக்கத் தில் தலைவரான காலம்சென்ற டி.எஸ். ரவீந்திரதாசுக்குப் பின்னர் செய்தியாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியான ஒன்றானது சங்கங்களில் சுயநலத்திற்காக பிரிவுகள் ஆனது  ஒரு  கவலை பல சங்கங்கள் பத்திரிகையாளர்களுக்காக இருக்கும் நிலையில் பல போட்டி பொறாமைகள் பதவி ஆசை கொண்டு பழைய உறுப்பினர் களை புதிய தலைவர்கள்  ஒருங்கிணைக்கத் தவறியதாலும், நாட்டில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், இலஞ்சம், இலாவன்யங்களுக்கு  எதிராக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடும் செய்தியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் களைந்து பதிய சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த நேர்மையான விதிமுறைகள் கொண்ட சுயநலம் இன்றிச் செயல்படும் தலைமை கொண்ட   புதிதாக மாநிலச் சங்கம் தேவை என்ற நிலை உள்ளது அப்படி ஒரு தீர்க்கமான அமைப்பு பதிவு செய்யவும்  அதைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்த ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதம் புதிய முன்னேற்ற ஏற்பாடுகளுடன் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது  கூட்டத்தில் கலந்துகொண்ட அணைவருக்கும் தேவகோட்டை நண்பர்கள் உணவு ஏற்பாடுகள் செய்திருந்தனர் கூட்டம் நிறைவில்             ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா