இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளியை நிரப்புவதற்கான அவசரத் தேவை உள்ளது: குடியரசு துணைத் தலைவர்


குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளியை நிரப்புவதற்கான அவசரத் தேவை உள்ளது: குடியரசு துணைத் தலைவர் புதிய சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை போட்டித் திறன் மிக்கவர்களாக ஆக்குவதற்கும் நமது பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே உள்ள திறன் இடைவெளியை நிரப்புவதற்கான அவசரத் தேவை உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். "வரும் வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்ஆர் வரலட்சுமி பவுண்டேஷனின் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையத்தை பார்வையிட்ட திரு நாயுடு, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அங்கு பயிற்சி பெறுவோரிடம் உரையாடினார். வேலைவாய்ப்பு சந்தையில் போட்டித்திறன் மிக்கவர்களாக திகழ 21-ம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறன் வளர்த்தல் முக்கியம் என்று அவர் அறிவுறுத்தினார்.

 ஜிஎம்ஆர் சின்மயா வித்யாலயாவை பின்னர் பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர், அதன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார். ஜிஎம்ஆர் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் திரு கிராந்தி மல்லிகார்ஜுன ராவ், ஜிஎம்ஆர் வரலட்சுமி பவுண்டேஷனின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா