காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின் துணை தலைவராக திரு விஜய் கோயல் பொறுப்பேற்பு

கலாசாரத்துறை அமைச்சகம்

காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின் துணை தலைவராக திரு விஜய் கோயல் பொறுப்பேற்பு


காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின் துணை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் திரு விஜய் கோயல் நேற்று பொறுப்பேற்றார். புதுதில்லியில் மகாத்மா காந்தி உயிர் தியாகம் செய்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமக்கு துணைத் தலைவர் பதவி


வழங்கியிருப்பதன் வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி தம்மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாகக் கூறினார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் தத்துவங்களைப் பரவலாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கை பற்றிய செய்தியை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  ஸ்வச்சதா, மின்னணு இந்தியா, கழிவறைகள் கட்டமைப்பு போன்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் அனைத்தும் முன்னேறிய இந்தியாவை உருவாக்கும் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக திரு கோயல் கூறினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா