வணிகம் மற்றும் வர்த்தக வார நிகழ்ச்சிகளின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது

வணிகம் மற்றும் வர்த்தக வார நிகழ்ச்சிகளின் நிறைவு விழா


சென்னையில் நடைபெற்றது


மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள்  வாயிலாக ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வணிகம் மற்றும் வர்த்தக வார நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழக அரசுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகள் மாநிலத்தில் 20.09.2021 முதல் 26.09.2021 வரை நடைபெற்றது. செப்டம்பர் 22-ஆம் தேதி மாநில அளவிலான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மேலும், மாநிலம் முழுவதும் ஏற்றுமதியாளர்கள் மாநாடு என்ற மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்தியை மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கண்காட்சி மற்றும் மாநாடும் சென்னையில் நடைபெற்றது. மேலும், ஏற்றுமதி சமூகம் பெரிதும் பயனடையும் கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு நடைபெற்றது.

ஒருவார கால நிகழ்ச்சிகளை நிறைவுக்குக் கொண்டு வரும் வகையில் சென்னையில் 26.09.2021 அன்று சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (மெப்ஸ்)- சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள சி.டி.எஸ் அரங்கில் நடைபெறும் நிறைவு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வள இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரபல ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர்கள் மற்றும் தொழில்துறை சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார்கள். “ஏற்றுமதி முனையங்களாக மாவட்டங்கள்” என்ற மத்திய அரசின் முன்முயற்சியும் நிகழ்ச்சியின்போது எடுத்துரைக்கப்பட்டது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்