திருவண்ணாமலையில் சிக்கலான நடராஜன் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம்

அமமுக பொதுச்செயலாளரும்முன்னால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மற்றும் முன்னால் சட்ட மன்ற உறுப்பினருமான

டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் இன்று சசிகலா முன்னிலையில் நடைபெறுகிறது.

மணமக்கள் ஜெய ஹரிணி, இராமநாதன் துளசி ஐயா வாண்டையார். அனுராதா தினகரன் தம்பதியரின் மகளுக்கு ஜெயஹரிணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்- ராஜேஸ்வரி அம்மாள் மகனான ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமணம் திருவண்ணாமலையில் இன்று நடப்பதையொட்டி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை 6.50 மணி முதல் 7.50 மணி வரை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும்,  மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஹோட்டலிலிருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடக்கிறது.

இன்று காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் நடைபெறுகிறது.வி.கே. சசிகலா நடராஜன் மற்றும் உறவினர்கள்  உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


ஏற்பாடுகளை விவேகானந்தம் முனையரையர் குடும்பத்தினர் செய்கின்றனர்.


திருமண விழாவையொட்டி திருவண்ணாமலை நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா