குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா. 2022 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் விஜய் ரூபானி திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 பாஜகவின் மக்கள் செல்வாக்கில் முதன்மையானதாகக் கருதப்படும் மாநிலங்களில் ஒன்று 1998 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் ஆட்சி உள்ளது.

பிரதமர் ஆகும் முன் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று  தேர்தல்களில் வென்று, 12 ஆண்டு காலமாக முதல்வராகத் தொடர்ந்தார்.

65 வயதாகும் முதல்வர்  விஜய் ரூபானி 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் ஏன் ராஜினாமா செய்தார் எனத்  தகவல்கள் இல்லை.

குஜராத்திற்கு அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் முதல்வராகத் தொடரவுள்ளதாக விஜய் ரூபானி தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு நன்றி தெரித்துக்கொள்வதாகவும், அடுத்து கட்சி  பொறுப்பு அளித்தால் சிறப்பாகச் செய்வேன் எனத் தெரிவித்தார். நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தர்தம் பவனை திறந்த வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே விஜய் ரூபானி பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை யாரும் எதிர்பார்க்கித நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் விஜய் ரூபானி பதவி விலகியதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. கட்சித் தலைமை உத்தரவின் அடிப்படையிலேயே அவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது., நேற்று முன்தினம் உள் துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் சென்றிருந்தார். தனிப்பட்ட காரணங்களால் அமித் ஷா குஜராத் சென்றதாகக் கூறப்பட்டாலும், அப்போது விஜய் ரூபானியை சந்தித்ததாக அம்மாநில அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷும் தற்போது குஜராத்தில் முகாமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.


தற்போதுள்ள நிலைமை மற்றும் அடுத்த முதல்வர் தேர்வு குறித்தும் குஜராத் மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டில் குஜராத் மாநில முக்கிய பாஜக தலைவர்களுடன் பி. எல் சந்தோஷ் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக வென்ற பின்னர், நரேந்திர மோடி பிரதமரான போது ஆனந்திபென் படேல் குஜராத் மாநில முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதுபோலவே 2017 சட்டசபைத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன், அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து விஜய் ரூபானி முதல்வர் பொறுப்பேற்றார். இப்போது அதே போல் விஜய் ரூபானியும் ராஜினாமா செய்தார். ஆனாலும் விஜய் ரூபானி ராஜினாமா செய்வதற்கான எந்தவொரு அரசியல் காரணமும் இல்லாமலிருந்தது. நேற்று கூட லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராகத் தனது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என விஜய் ரூபானி பேசியிருந்தார். ஆக குஜராத்தின் அரசியல் களம் அடுத்த தேர்தல் நோக்கியே நகர்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா