தாம்பரம் இரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவி குத்திக் கொலை.

தனியார் கல்லூரி மாணவி ஸ்வேதா (வயது 22 ) அவருக்கு அறிமுகமான இராமச்சந்திரனுடன் தாம்பரம் இரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தத நிலையில் திடீரென இராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, தானும் கழுத்தறுத்து  தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததால்  அருகில்ருந்தவர்கள் உடன் காவல்துறைக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஸ்வேதா உயிரிழந்தார்.

கழுத்த அறுத்துக்கொண்ட ராமச்சந்திரன் சீராக இருப்பதக் கூறப்படுகிறது. தனியார் கல்லூரி மாணவியை  கத்தியால் குத்திக் கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி நடந்த நிலையில் அப்பகுதியேபெரும் பரபரப்பானது.இக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரமா அல்லது வேறு  காரணமா என சேலையூர் சரக காவல்துறைஉதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் விசாரணை செய்கிறார்கள் .விசாரணையில் இருவரும் காதலர்கள் என்றும் இந்த இளைஞரின் செயல்கள் பிடிக்காமல் ஸ்வேதா ஒதுங்கியதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகவே. அந்த இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிகிறது. ஸ்வேதா கொலைச் சம்பவம் நுங்கம்பாக்கம் சுவாதியின் கொலை போன்றே இருக்கிறது. காதலனின் செயல்பாடுகள் பிடிக்காவிட்டாலோ வீட்டில் எதிர்ப்பு கிளம்பினாலோ அவரிடம் இருந்து ஒதுங்கும் பெண்களை "எங்கிருந்தாலும் வாழ்க" என வாழ்த்தும் ஆண்களை விட ஆசிட் வீச்சு, கொலை, ஆபாச படம் எடுத்து மிரட்டல், திருமண மண்டபத்தில் கலாட்டா, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களே சமீபத்தில் அதிகம் இடம்பெறுகின்றன. இது போன்ற குற்றவாளிகளை ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். காதலுக்கு பச்சைக் கொடி காட்ட பெண்ணுக்கு உரிமை உள்ளது போல் வேண்டாம் என சிவப்புக் கொடி காட்டவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை உணர வேண்டும்.


பெண்களும் ஒருவரை காதலிப்பதற்கு முன்னர் காதலுக்கு கண்ணில்லை என்பதை போல் எதற்கும் அவசரப்படாமல், அந்த நபர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராய்ந்து தனது குடும்பத்தில் எதிர்ப்பை சமாளித்து வெல்ல முடியுமா இல்லை அவர்களது சம்மதத்தை பெற்று திருமணம் செய்வது சாத்தியமா என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பின்னர் முடிவெடுத்தால்  இது போன்ற அசம்பாவிதச் சம்பவங்கள், உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். புத்திசாலி பெண்கள் இதுபோன்ற கயவர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தக்க பயிற்சி தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா