சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கிய கடைக்கு ரூ.5000 அபராதம்

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் NAESEY SNACK KIOSK என்ற  விற்பனைக் கடை செயல்படுகிறது. 


10 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட கடை மட்டுமே செயல்பட வேண்டும். ஆனால் 20 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட கடையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் அராஜகமாக இயங்கிவந்த சூழலில். மாவட்ட மருத்துவமனை காரைக்குடியில் தான் இந்தக் கடை இயங்க வேண்டும் ஆனால். எந்த ஒரு முன் அனுமதியுமின்றி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த கடைக்கு சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்த அனுமதியில்லை. மின் இணைப்புக் கூட

மருத்துவமனையிலிருந்து தான் திருடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் முறையான அனுமதியுமில்லை.  இந்தக் கடையில் காஃபி மட்டுமே விற்கப்பட வேண்டும்.அதைமீறி அனுமதியின்றி தரமற்ற பொருட்களான குளிர்பானங்கள், பிஸ்கட்கள், தின்பண்டங்கள், பிளாஸ்டிக் கப், வாளி, தலையணை, வேஷ்டி துண்டு, பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் நபர்கள்  வாங்கி உடுத்தும் உடைகள் உட்பட்ட ஃபேன்ஸி பொருட்களும் விற்கப்படும்

நிலையில் அவைகள் தரமற்றதாகவும் உள்ளது. பிரசவத்திற்கு வரும் கர்ப்பினிப்  பெண்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள மருத்துவ கிட் இந்த கடையில் தான் வாங்கி வரவேண்டும் என்று நோயாளிகளை மருத்துவமனையில் பணி செய்யும் ஊழியர்கள் நிர்பந்திக்கிறார்கள் என நோயாளிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில். இந்தக் கடையை எந்த ஒரு முன்

அறிவிப்புமின்றி  ஆய்வு செய்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் அதோடு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு சில பணியாளர்கள் சேர்ந்து இந்தக் கடையை நடத்தி இலாப நோக்கத்துடன் நடத்தி வருவதனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பாதிப்புகள் நிகழ்வதாக பல தரப்பட்ட நோயாளிகள்,கோரிக்கை விடுத்த நிலையில்

இந்த கோரிக்கையை ஏற்று இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சிவகங்கை திமுக நகரச் செயலாளரும், பருவ இதழ் ஆசிரியருமான சி.எம் துரை ஆனந்த் கோரிக்கை விடுத்த நிலையில்  

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் NAESEY SNACK KIOSK என்ற கடையில் தரமற்ற தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுவது கண்டறிந்ததன் அடிப்படையில் இன்று மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டாக்டர் பிரபாவதி திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் தரமற்ற தடைசெய்யப்பட்ட கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்ததால் ரூபாய் 5000/- அபராதம் விதித்தார்.மேலும் யாரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை வரும் முன் கடை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே மக்கள் விரும்புவது.அதை உரியவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்