சங்கராபுரம் பட்டாசுக் கடை தீ விபத்தோடு சிலிண்டரும் வெடித்துச் சிதறியது 5 பேர் கருகிப் பலி,பலர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்


சங்கராபுரம் பட்டாசுக் கடை தீ விபத்தோடு சிலிண்டரும் வெடித்துச் சிதறியது 5 பேர் கருகிப் பலி,பலர் படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசுக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,


சங்கராபுரத்தில் முருகன் என்ற நபருக்குச் சொந்தமான பட்டாசுங் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மொத்த பட்டாசுகளும் ஒரே நேரத்தில் பலத்த சப்தமாக வெடித்துச் சிதறியதனால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிழம்பு கலந்து புகைமண்டலமாகக்  காட்சியளித்த நிலையில் தீ வேகமாகப் பரவி அருகிலிருந்த கடைகளிலும் பற்றிய தீ விபத்தில் கடைகளிலிருந்த 5 பேர் உடல் கருகிப் பலியானார்.


அந்தக் கடைகளில் பணியாற்றிற 25 க்கும் மேற்பட்ட மக்கள் தீக்காயத்துடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்


தீயை அணைக்கும் பணியில் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் தியாகதுருவம் உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனங்களை வரவழைத்து தீயணைக்கும் பணியில்  ஈடுபட்டனர்


தீ விபத்து காரணமாக சங்கராபுரம் புகை மண்டலமாக காட்சிளித்த நிலையில். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியும் நடைபெறுகிறது.


விபத்து நடந்த பட்டாசுக் கடைக்கருகிலுள்ள பேக்கரியிலிருந்த எரிவாயு சிலிண்டரும், விபத்தின்போது வெடித்துச் சிதறியதனால் சேதம் அதிகரிக்கிறது. அதனால் மீட்புப் பணியில் தொய்வும் ஏற்படுள்ளது.    கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருடன்  சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் ஆகியோர் பார்வையிட்டனர்.சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக் கூறியதாவது "துணிக்கடைக்கு பின்புறம் இருந்த பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் மூலம் துணிக்கடையில் தீப்பரவியதில் தீ விபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசுக் கடை மற்றும் ஜவுளிக்கடை முழுவதுமாக எறிந்துவிட்டது. மேலும் அருகே இருந்த செல்போன் கடை உட்பட மூன்று கடைகள் தீ பரவியதால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பட்டாசுக் கடையை கடந்த 10 ஆண்டுகளாக உரிய அனுமதியுடன் கடை உரிமையாளர் நடத்தி வருகிறார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," எனக் காவல் துறைகண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா