தசரா நவராத்திரி விழாவுக்கு 9 நாளும் 9 நிற உடையில் வரும்படி உத்தரவு போடப்பட்டிருந்த யூனியன் வங்கி வாபஸ் பெற்றது

தசரா நவராத்திரி விழாவுக்கு 9 நாளும் 9 நிற உடையில் வரும்படி  உத்தரவு  போடப்பட்டிருந்த நிலையில்


இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா?  என்ற வினா எழவே 

உத்தரவை உடனே திரும்பப் பெறப்பட்டது.

யூனியன் பாங்க் ஆப் இந்தியா மைய அலுவலகத்திலுள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டிருந்தார்.. 


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் விடுமுறை நாளாக இருந்தாலும். என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்த நிலையில் யார் இவருக்கு  இந்த அதிகாரம் தந்தது எனவும், ஊழியர்கள் பணி விதி முறைகள் எந்த சரத் தின் அடிப்படையில் இந்தச் சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்  என நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பத்திரிகைத் தொலைக்காட்சி வாயிலாக

வினாக்கள் எழுந்தன!.


நவராத்திரியை இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் வங்கிகளில் பணி செய்யும் எல்லோரும் ஒரே மாதிரியான  உடை உடுத்திக் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார அத்துமீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். 


நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டுமெனவும் சுற்றறிக்கையை திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது இது தற்போது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சுற்றறிக்கையை வாபஸ் பெறப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்