பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (வயது 82) காலமானார்..மிக பிரபலமான பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்! மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் மூலம் ஸ்ரீகாந்த் என அறியப்பட்ட வெங்கட்ராமன்..
தமிழ் சினிமாவில் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முதல் படத்தில் கதாநாயகன்
தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்
1965 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.
சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.200- படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார். சுமார் 50 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 82-வயதான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் திரைப்பட நடிகராக வருவதற்கு முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 1964-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய வெண்ணிறாடை திரைப்பட வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து
அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு என்ற கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருப்பார். இந்தப் படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா, நடிகை வெண்ணிறாடை நிர்மலா மற்றும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருக்கும் முதல் படமாக அமைந்தது.1972 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.
கருத்துகள்