ஊரக மின்மயக் கழகம் மற்றும் மின்துறை நிதிக்கழகம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம்

எரிசக்தி அமைச்சகம் ஊரக மின்மயக் கழகம் மற்றும் மின்துறை நிதிக்கழகம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்


24 மணி நேரமும் குறைந்த செலவில் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்வது அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று மின்துறை அமைச்சர் கூறினார்

ஊரக மின்மயக் கழகம் (REC) மற்றும் மின்துறை நிதிக்கழகம் (PFC) ஆகியவற்றின் செயல்பாடு குறித்து மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் ஆய்வு செய்த போது 24 மணி நேரமும் குறைந்த செலவில் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்வது அரசின் தொலைநோக்குத் திட்டம் என்றார்.


இந்த நிறுவனங்களின் சந்தைப் பங்கினை அதிகரிக்க தங்களின் போட்டித் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். நியாயமான விலையில் நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தத் துறையில் மாறியுள்ள வர்த்தகத் சூழலை ஏற்கும் விதமாக உத்திகளை வகுக்க வேண்டுமென்று ஊரக மின்மயக் கழகம் மற்றும் மின்துறை நிதிக்கழகம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் இந்த நிறுவனங்களை அமைத்து மக்களை சென்றடைவதை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். இது தவிர இந்த நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்ட திட்டங்களை பார்வையிடுவதை இறுக்கமாக்க வேண்டும் என்று பணித்த மாண்புமிகு அமைச்சர் இதற்கு நிறுவன அதிகாரிகள் அல்லது வெளியிடத்திலிருந்து நிபுணர்களை பணியமர்த்தி அவ்வப்போது மேற்கொள்ளும் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

மேலும் சில விநியோக நிறுவனங்களின் நிதிநிலை குறித்து கவலைத் தெரிவித்த திரு.சிங், சம்பந்தப்பட்ட மின்சார விநியோக நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் தங்களிடம் கடன் பெற்றவர்கள் பங்கேற்பதை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று யோசனை தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்