மனித உரிமைகள் பெயரை தனியார் அமைப்பு பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் சட்டப்படி நடவடிக்கை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் எச்சரிக்கை.

மனித உரிமைகள் பெயரை தனியார் அமைப்பு பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் சட்டப்படி நடவடிக்கை  என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு எச்சரிக்கை.


செய்து வெளியிட்ட சுற்றறிக்கையில் தகவலாவது: மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கவும், தேசிய அளவில் புதுடில்லியில் தேசிய மனித உரிமை ஆணையமும் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும்  சட்டப்படி அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. ஆனால் "மனித உரிமைகள்" (Human Rights) வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தி செயல்படுவதாக காவல்துறைக்கு அதிகம் புகார்கள் வருகிற நிகழ்வு, ஏற்கனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 ன் படி உரிய சட்டத்திருத்தம் பிரிவு 2-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்து தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 19 ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. 

 நீக்க வேண்டும் மேலும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லாடலை ஏற்கனவே தங்களது பெயர்களுடன் பதிவு செய்து பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லாடலை தங்களது பெயரிலிருந்து நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதில் இருந்து "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.

  தனியார் அமைப்பு மேலும், தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது "இது ஒரு தனியார் அமைப்பு" என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அதன் பின்னும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களை போலியாக அடையாளப்படுத்தி கொண்டும், வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் ஸ்டிக்கர்களை (Name Board & Sticker) பொருத்தி கொண்டு தங்களை பொது அதிகாரர் அமைப்புகள் போல காட்டிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருவதாகவும், மற்றும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகள் வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே தேவை.  ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது மேலும், வாகனங்களில் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு வாகனங்களை இயக்கினாலோ, தனியார் அமைப்புகள் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயரில் செயல்பட்டாலோ மற்றும் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற வார்த்தையை பயன்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்து போலியாக நிதி வசூல் செய்வது, உறுப்பினர் மற்றும் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகேடுகளுடன் செயல்பட்டால் அந்த அமைப்புகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும். அவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை தலைமையலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தவும் இதன் மூலம் அனைத்து பிரிவு அலுவலர்கள் (All Unit Officers) அறிவுறுத்தியுள்ளார்.மனித உரிமைகள்" (Human Rights) எனும் சொல் வழக்கை முன்பு பதிவு செய்து பயன்படுத்திய அமைப்புகள் அச்சொல்லாடலை நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதில் இருந்து "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை நீக்க வேண்டும். தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது "இது ஒரு தனியார் அமைப்பு" என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அதன் பின்னும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களையும் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டும், வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் ஸ்டிக்கர்களை (Name Board & Sticker) பொருத்தி கொண்டு தங்களை அரசு பொது அதிகார அமைப்புகள் போல காட்டிக் கொண்டு இயக்கி வருவதாகவும், மற்றும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் திறப்பு விழா சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே தேவை.வாகனங்களில் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு வாகனங்களை இயக்கினாலோ, தனியார் அமைப்புகள் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயரில் செயல்பட்டாலோ மற்றும் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பொதுமக்களை நம்ப வைப்பது மற்றும் நிதி வசூல் செய்வது, உறுப்பினர் மற்றும் பெயரில் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகேடுகளுடன் செயல்பட்டால் அந்த அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும். அவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை தலைமையலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும் இதன் மூலம் அனைத்து பிரிவு அலுவலர்கள் (All Unit Officers) அறிவுறுத்தப்படுகிறார்கள். என தகவல் தெரிவிக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா