தசரா விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் தசரா விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து


தசரா விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

‘‘தசரா புனித நிகழ்வில், நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகம் மற்றும் ஆர்வத்துடன் கொண்டாப்படும், தசரா விழா தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெறுவதன் அடையாளமாக உள்ளது. இந்த விழா, ராமர் வாழ்ந்த புனிதமான, நல்லொழுக்க மற்றும் உன்னத வாழ்வை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் காட்டிய நீதி வழியை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. 

நாம் ராட்சத சக்திகளை தொடர்ந்து அடக்கி, நல்லதையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் நிகழ்வு தசரா. இந்த விழா, நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா