இந்திய அரசின் தலைமை ஹைட்ரோகிராபராக துணை அட்மிரல் அதிர் அரோரா பொறுப்பேற்று கொண்டார்

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய அரசின் தலைமை ஹைட்ரோகிராபராக துணை அட்மிரல் அதிர் அரோரா பொறுப்பேற்று கொண்டார்


இந்திய அரசின் தலைமை ஹைட்ரோகிராபராக துணை அட்மிரல் அதிர் அரோரா பொறுப்பேற்று கொண்டார். 2021 செப்டம்பர் அன்று ஓய்வு பெற்ற துணை அட்மிரல் வினய் பத்வாரிடம் இருந்து இந்த பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

1985-ல் இந்திய கடற்படையின் நிர்வாக பிரிவில் இணைந்த துணை அட்மிரல் அதிர் அரோரா, ஹைட்ரோகிராபி எனும் நீர் ஆய்வு சார்ந்த துறையில் நிபுணர் ஆவார். இந்திய கடற்படை பகுதியில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஐஎன்எஸ் சட்லெஜ் கப்பலின் தலைமை பொறுப்பில் அவர் இருந்த போது, 2004-ம் வருடம் சுனாமி உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இலங்கையில் இருக்கும் கல்லே துறைமுகத்திற்கு அருகே முதலில் சென்ற கப்பலாக அது இருந்தது. ஐஎன்எஸ் சர்வேக்‌ஷக் கப்பலின் தலைமை பொறுப்பில் அவர் இருந்த போது, மொரீஷியஸ், செஷல்ஸ் மற்றும் கென்யாவில் வெளிநாட்டு ஒத்துழைப்பு ஆய்வுகளை மேற்கொண்ட அரிதான பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தி ஹேக்கில் உள்ள நிரந்தர நீதிமன்றத்தில் வங்கதேசம் உடனான கடல்சார் வழக்கில் இந்தியாவை அவர் பிரதிநிதிப்படுத்தியுள்ளார். நவீன வசதிகளுடன் கூடிய கப்பல் கட்டும் திட்டத்திற்கும் அவர் தலைமை வகித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்