உள்ளாட்சித் தேர்தலில்எதிர் கட்சிகள் பலமிழந்த நிலையில் ஆளும் அரசின் வெளிப்படைத் தன்மை காரணமாக வெற்றி

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் நடந்த நிகழ்வுகளை டாடா ஸ்கை நிறுவனம் தனது விளம்பரத்தில் பட்டவர்த்தனமாக கூறி இருப்பதை விட கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேட வேண்டாம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜாதிய அரசியல் செய்த பாமக தோலுரிக்கப்பட்டுள்ளது.


சீமான் என்ற ஒருவர் மட்டுமே அவர் கட்சியை கட்சியை தமிழகத்தின் கடைக் கோடி வரை கொண்டு செல்ல முடியாது. 10 ஆண்டுகள் ஆகி விட்டது இந்நேரம் குறைந்தது 200-300 தலைமை பண்புள்ள இளைஞர்களாவது உருவாகி இருக்க வேண்டும். ஆனால் சீமானிற்கு ஏதோ சிக்கல், அதனால் தலைமைப் பண்புள்ள இளைஞர்கள் இன்னும் பட்டி தொட்டி  எங்கும் பரவி நாம் பார்க்கவில்லை.


நடிகர் விஜய் மன்றத்தினர் 2005-ஆம் ஆண்டு காலகட்ட தேமுதிக வாக மாறிய நடிகர் விஜய்காந்த் இரசிகர் மன்றத்தினரை நினைவுபடுத்துகிறார்கள்.

அமமுக சற்றே ஆறுதல் அடையலாம்.

அதிமுக என்ற கட்சியை ஆளுமைகள் இல்லாமல் ஒரு விபத்தில் முதல்வரான எடப்பாடி கே.பழனிச்சாமி  என்ற ஒரு முன்னாள் முதல்வர் என்றதோடும், அடித்த கொள்ளையோடும் விலகி நிற்பது நலம். மக்கள் தொண்டர்கள் விலக்கி விட்டார்கள் என்பதே இந்த தேர்தலில் பாடம் திருநெல்வேலி மாவட்டம்  சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார்;  பெருமாத்தாள்.


 எதிர்த்து நின்ற அனைவரையும், ஜாமீன் தொகை இழக்கச் செய்து; வெற்றியைப் பெற்றுள்ளார்; ஊராட்சிமன்றத்தின் புதிய தலைவியாக முதுமைப் பெண்

வயது என்பது (90) வெறும் நம்பர்தான் !  13.10.2021 ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 வயது பொறியியல் பட்டதாரி இளம்பெண் ! .


தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி சுப்பிரமணியன் . தொழிலதிபரான இவரது மனைவி சாந்தி , பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் . இவர்களுக்கு சாரு கலா ( வயது 21 ) என்ற மகளும் , சந்துரு என்ற மகனும் உள்ளனர் .இந்நிலையில் பொறியியல் பட்டதாரியான சாருகலா , வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் .

தேசப்பிதா மகாத்மா காந்தி , கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என கூறியது மனதில் பதிந்த நிலையில் , கிராம வளர்ச்சிக்கு பாடுபட்டு மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் போட்டியிடுவதாக சாருகலா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில்  வாக்கு எண்ணிக்கையில் 3336 வாக்குகள் பெற்று 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இளம் வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வுபெற்றார் .

 இந்த நிகழ்வுகளை பப்ளிக் ஜஸ்டிஸ் தனது வாசகர்கள் சார்பில் வரவேற்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா