இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் காலியாக இருக்கும் இடங்களை பிற பிரிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதில்  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர்கள் சேர்க்கையில் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியிடங்களிருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட,  மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோரு பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பி கொள்ளலாமெனக் கூறப்பட்டுள்ளது.


வடமாவட்டங்களில் உள்ளது போல் தென் மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் வாசிக்கவில்லை என்பதால் இட ஒதுக்கீட்டில் கீழ் வரும் இடங்கள் பெரும்பாலானவை, காலியாக இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், மற்றும் சீர் மரபினரைக் கொண்டு அதனை நிரப்புவதற்கும், இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருப்பின், அதனை வன்னியர்களைக் கொண்டு நிரப்பிட ஏதுவாகவும், இந்த உத்தரவு அரசிதழிலாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வேறு ஒரு இட ஒதுக்கீட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீதிமன்றம் வன்னிய குல சத்திரியர்களை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்று அழைக்க வேண்டாம். அட்டவணைப் பிரிவு என்றே அழைக்கலாம். என்றும்  வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவு இல்லை என்றால் பிற்படுத்தப்பட்ட பிரிவை எடுத்து விடலாம். எனவும் மூத்த வழக்கறிஞர்  மாசிலாமணி சமீபத்திய வாதம் மூலம் தெரிவித்திருந்தார்.65 ஜாதிகள் தமிழகத்தில் 8.2 விழுக்காடு தான் உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு 7 விழுக்காடும் என்றும் 28 சாதிகள் 3.2 விழுக்காடு தான் உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு 2.5 விழுக்காடும் 13.5 விழுக்காடு உள்ள வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளதென்று தமிழகத்தின் அரசு நீதி மன்றத்தில் அறிக்கை வழங்கி உள்ள நிலையில்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நீங்கள் தான் அறிந்து அறிக்கை தர வேண்டும். என்பது தான் தற்போது உள்ள நிலை. மேலும் வன்னியர்கள் தமிழகத்தின் தர்மபுரி, சேலம் வேலூர், உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மெஜாரிட்டி யாகவும் இதர மாவட்டங்களில் மைனாரிட்டி அளவில் வாழ்கின்றனர் என்பது தான் இந்த அரசிதழ் கூறும் உண்மை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா