சுற்றுலா அமைச்சகம் புத்தமத சுற்றுலாவை ஊக்குவிக்க புத்த கயாவில் கருத்தரங்கம்: சுற்றுலாத்துறை அமைச்சகம் நடத்தியது
புத்தமத சுற்றுலாவை ஊக்குவிக்க, புத்த கயாவில் நேற்று கருத்தரங்கை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் நடத்தியது. இதில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் திரு கமலா வர்தன் ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம், புத்தமத சுற்றுலா தலத்தில், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்களை முன்வைப்பது மற்றும் இந்தியாவில் புத்தமத சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதாகும். புத்தமத தலங்களை பிரபலப்படுத்தும் ரயில் சுற்றுலா கடந்த 4ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த சுற்றுலா தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்த பிரபலப்படுத்தப்படும் சுற்றுலாவில் தில்லியில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் இணைக்கப்படுகின்றன. புத்த கயா மற்றும் வாரணாசியில் கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகளில் சுற்றுலா நடத்துனர்கள், விடுதி உரிமையாளர்கள், ஊடகத்தினர், மத்திய, மாநில சுற்றுலா அதிகாரிகள் என 125 பேர் பங்கேற்று சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பர்
கருத்துகள்